தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  District Judge: அமெரிக்காவில் நீதிபதியான இந்தியர் - ஒப்புதல் வழங்கிய செனட் குழு!

District Judge: அமெரிக்காவில் நீதிபதியான இந்தியர் - ஒப்புதல் வழங்கிய செனட் குழு!

Mar 09, 2023, 09:36 AM IST

District Court Judge: நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சத்தைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
District Court Judge: நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சத்தைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

District Court Judge: நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சத்தைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுப்பிரமணியன் என்பவரை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு இறுதியில் நியமனம் செய்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

FACT-CHECK : உணவு பரிமாறும் போது பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருந்ததா? வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?

அவ்வாறு நியமனம் செய்யும் பட்சத்தில் அதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை ஒப்புதல் கொடுப்பது அவசியமாகும். இந்நிலையில் வழக்கறிஞர் அருண் சுப்பிரமணியன் நியமனம் செய்வதோ தொடர்பாக நேற்று செனட் சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக அருண் சுப்பிரமணியன் நியமனம் செய்ய ஆதரவு தெரிவித்து 58 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 37 பேர் அதில் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

பின்னர் அவரது நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் அருண் சுப்பிரமணியன் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இவர் முதல் தெற்காசிய வம்சாவளி நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்த வழக்கறிஞர் அருண் சுப்பிரமணியன் குடும்பத்தினர் 1970களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்துள்ளனர். 1979 ஆம் ஆண்டு அருண் சுப்பிரமணியன் பிறந்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி