தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Amit Shah: 'பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம், யாதவர் மக்கள் தொகை வேண்டுமென்றே உயர்த்திக் காட்டப்பட்டது'-அமித் ஷா

Amit Shah: 'பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம், யாதவர் மக்கள் தொகை வேண்டுமென்றே உயர்த்திக் காட்டப்பட்டது'-அமித் ஷா

Manigandan K T HT Tamil

Nov 05, 2023, 05:22 PM IST

google News
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஷாவின் குற்றச்சாட்டு குறித்து சாடினார், அவர் நாட்டில் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார்.
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஷாவின் குற்றச்சாட்டு குறித்து சாடினார், அவர் நாட்டில் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார்.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஷாவின் குற்றச்சாட்டு குறித்து சாடினார், அவர் நாட்டில் ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசாங்கத்தை தாக்கிப் பேசினார். மாநிலத்தின் ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களின் மக்கள் தொகையை "வேண்டுமென்றே" உயர்த்திக் காட்டுவதாக குற்றம் சாட்டினார். ' மகாத்பந்தன்' அரசாங்கம் "சமாதான அரசியலில்" ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான முடிவு ஜே.டி.(யு) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது எடுக்கப்பட்டது. ஆனால் இந்த சர்வே நடத்தப்பட்ட விதம் மகாகத்பந்தன் அரசாங்கத்தின் மறைமுகமான வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களின் மக்கள் தொகை வேண்டுமென்றே உயர்த்தப்பட்டது,” என்று பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் அமித் ஷா கூறினார்.

"பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களின் நலனில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

அக்டோபர் 2 அன்று வெளியிடப்பட்ட ஜாதி கணக்கெடுப்பு முடிவுகளின்படி , 112 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் (ECB) மக்கள் தொகையில் 36.01 சதவிகிதம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் (30 சமூகங்கள்) மேலும் 27.12 சதவிகிதம் ஆகும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் EBC களை உள்ளடக்கிய குழு 63.13 சதவீதமாகவும், எஸ்சி 19.65 சதவீதமாகவும், எஸ்டி 1.68 சதவீதமாகவும் உள்ளது.

இதற்கிடையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அமித் ஷாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். அவர் நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார்.

“முஸ்லீம் மற்றும் யாதவ் மக்கள் வேண்டுமென்றே அதிகமாக காட்டப்பட்டதாக அமித் ஷா கூறுகிறார் (பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பில்). நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன், அது நடந்திருந்தால், அவர் நாட்டிலும் பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஜாதிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்று யாதவ் ஊடகங்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த பேச்சுக்கள் அனைத்தும் அவரிடமிருந்து வந்தவை… அவர் இங்கு வரும்போதெல்லாம், அவர் பொய் பேசுகிறார், ஏனென்றால் அவர் வேறு எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் இங்கே வேலைகளை செய்கிறோம். அதைப் பற்றி அவர் பேச மாட்டார்" என்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி