தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Maharashtra: ’அஜித்பவாரால் முதல்வர் ஆக முடியாது! நீங்க நம்பலனாலும் அதான் நெசம்’ தேவேந்திர பட்னவிஸ்

Maharashtra: ’அஜித்பவாரால் முதல்வர் ஆக முடியாது! நீங்க நம்பலனாலும் அதான் நெசம்’ தேவேந்திர பட்னவிஸ்

Kathiravan V HT Tamil

Jul 24, 2023, 09:34 PM IST

google News
”அஜித் பவாருக்கு தான் முதல்வராக முடியாது என்பது நன்றாகவே தெரியும் என்றும், ஜூலை 2-ம் தேதிக்கு முன் நடந்த கூட்டத்தின் போது அவருக்கும் அது தெரிவிக்கப்பட்டதாகவும் ஃபட்னாவிஸ் கூறி உள்ளார்” (DeepaK Salvi)
”அஜித் பவாருக்கு தான் முதல்வராக முடியாது என்பது நன்றாகவே தெரியும் என்றும், ஜூலை 2-ம் தேதிக்கு முன் நடந்த கூட்டத்தின் போது அவருக்கும் அது தெரிவிக்கப்பட்டதாகவும் ஃபட்னாவிஸ் கூறி உள்ளார்”

”அஜித் பவாருக்கு தான் முதல்வராக முடியாது என்பது நன்றாகவே தெரியும் என்றும், ஜூலை 2-ம் தேதிக்கு முன் நடந்த கூட்டத்தின் போது அவருக்கும் அது தெரிவிக்கப்பட்டதாகவும் ஃபட்னாவிஸ் கூறி உள்ளார்”

 

அஜித் பவார் மகாராஷ்டிரா முதல்வராக முடியாது, இந்த உண்மை அவருக்கு தெரியும்: ஃபட்னாவிஸ்

ஆகஸ்ட் மாதம் ஏக்நாத் ஷிண்டேவுக்குப் பதிலாக அஜித் பவார் முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவானின் பேச்சுக்கு மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அஜித் பவாருக்கு தான் முதல்வராக முடியாது என்பது நன்றாகவே தெரியும் என்றும், ஜூலை 2-ம் தேதிக்கு முன் நடந்த கூட்டத்தின் போது அவருக்கும் அது தெரிவிக்கப்பட்டதாகவும் ஃபட்னாவிஸ் கூறினார்.

மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற சவானின் கூற்றுக்கு பதிலளித்த ஃபட்னாவிஸ், அந்த தேதிக்குள் அமைச்சரவை விரிவாக்கப்படலாம், அதை தவிர வேறு எதுவும் இல்லை என விளக்கம் அளித்தார்.

விதான் பவன் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக நீடிப்பார் என்றும் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் மகாயுதி' குறித்து மக்களை குழப்புவதை அவர்கள் நிறுத்த வேண்டும். தலைவர்கள் குழப்பமடையவில்லை, ஆனால் கட்சியினர் குழப்பமடைகின்றனர். பிருத்விராஜ் சவான் போன்றவர்கள் வதந்திகளை பரப்புகின்றனர் என குற்றம்சாட்டினார்.

கடந்த ஜூலை 2ஆம் தேதி அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தலைமையில் 8 எம்எல்ஏக்கள் சிவசேனா-பாஜக கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில், எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்ற சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி