Ajit Pawar: இரண்டாக உடைந்தது தேசியவாத காங்கிரஸ்! துணை முதல்வர் ஆனார் அஜித்பவார்
Jul 02, 2023, 03:08 PM IST
கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக உடன் இணைந்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அஜித்பவார் 80 மணி நேரத்திற்கு பின்னர் அப்பதவியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த 29 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்கட்சித் தலைவராக இருந்த அஜித்பவார் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜக கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்துகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார் தற்போது பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததுடன் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.
ஏற்கெனவே பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக உடன் இணைந்து மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அஜித்பவார் 80 மணி நேரத்திற்கு பின்னர் அப்பதவியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பிளவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிக்கையாளரும், வலதுசாரியுமான கோலாகல சீனிவாசன் கூறுகையில், இதற்கும் பாஜகவுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இது சரத்பவார் தானாக தேடிக் கொண்டது. சில நாட்களுக்கு முன் தான் ராஜினாமா செய்யப்போவதாக அவர் நாடகமாடினார். பின்னர் அந்த ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார். சரத் பவாருக்கு அடுத்த நிலையில் ஒரு பெரும்பதவி வேண்டும் என்ற கோரிக்கையை அஜித் பவார் கேட்ட நிலையில், அந்த பதவியை அஜித் பவாருக்கு தராமல் அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கும், பிரபுல் படேலுக்கும் அளித்தார். இந்த நிலையில்தான் சரத்பவாரின் வலது கை என்று கருதப்படும் புச்பால் உட்பட பலரும் வெளியேறி உள்ளார்கள். சரத் பவார் தனது கட்சியின் அடுத்த தலைவராக சுப்ரியா சுலேவை முன்னிருத்துவதற்கு எதிராக இது நடந்துள்ளது என கூறி உள்ளார்.
டாபிக்ஸ்