தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Airtel Minimum Recharge: ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்வு!

Airtel minimum recharge: ஏர்டெல் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்வு!

I Jayachandran HT Tamil

Nov 22, 2022, 08:37 AM IST

google News
குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதுதில்லி: இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், ஹரியாணா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிகிறது.

இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது. அதற்கான கட்டணம் டெலிகாம் நிறுவனத்தை பொறுத்து மாறுபடும். இந்தச் சூழலில் ஏர்டெல் அந்த கட்டணத்தில் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது.

இப்போது வரை ஹரியாணா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணமாக ரூ.99 உள்ளது. இதில் ரூ.99 டாக்டைம் நொடிக்கு ரூ.2.5 பைசா கட்டணம் மற்றும் 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்தக் கட்டண்ததைத்தான் ஏர்டெல் இப்போது உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வாடிக்கையாளர்கள் இனி ரூ.155-க்கு குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது. இதனை சோதனை முயற்சியாகவே ஏர்டெல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொறுத்து நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக இந்தத் திட்டத்தை ஏர்டெல் நடைமுறைக்குக் கொண்டு வரும் எனத் தெரிகிறது.

அப்படி செய்தால் ரூ.155-க்கு குறைவான ரீசார்ஜ் இருக்காது.

கடந்த 2018 முதல் ரூ.35, ரூ.49, ரூ.79 கடைசியாக ரூ.99 என குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி