துருக்கி – சிரியாவை தொடர்ந்து இந்தியாவில் பூகம்பம்? – டச்சு புவியிலாளர் கணிப்பு
Feb 10, 2023, 10:04 AM IST
Tukey Tragedy : ஆப்கானிஸ்தானில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படலாம். ஆப்கானிஸ்தானில் துவங்கி பாகிஸ்தான், இந்தியா வழியாக இந்தியப்பெருங்கடலில் அது முடிவடையலாம் என்றும், இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய சேதாரங்களை ஏற்படுத்தலாம் என்றும் கணித்துள்ளார்.
டச்சு புவியியலாளர் பிராங்க் ஹீகர்பீட்ஸ் அவரின் அண்மை ஆராய்ச்சியில், துருக்கி – சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படலாம் என மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கூறியிருந்தார். அதேபோல் பிப்ரவரி 6ம் தேதி துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலியாக்கி பேரழிவை உண்டாக்கியது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மீட்பு படையினர் துருக்கி – சிரியாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பிராங்க் ஹீகர்பீட்சின், மூன்று நாட்களுக்கு முந்தைய கணிப்பை அரசு மட்டும் கவனித்திருந்தால், இந்த பேரழிவு குறைப்பட்டிருக்கும்.
ஆப்கானிஸ்தானில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று அவர் தற்போது கூறுகிறார். ஆப்கானிஸ்தானில் துவங்கும் நிலநடுக்கம் பாகிஸ்தான், இந்தியா வழியாக இந்தியப்பெருங்கடலில் போய் முடிவடையும் என்று கணித்துள்ளதுடன், இந்த நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
இவரது வீடியோக்களும், டிவீட்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
வளிமண்டல ஏற்றஇறக்கங்களை பார்த்தால் இந்தப்பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், இவை தோராயமான மதிப்பீடுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது யூடியூப் வீடியோவில் ஹீகர்பீட்ஸ் சூரிய குடும்பத்தை தெளிவாக விளக்கி, அதன் மூலம் நிலநடுக்கத்தை எவ்வாறு கணிக்க முடியும் என்றும் கூறுகிறார். ஹீகர்பீட்ஸ், சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வே என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்.
துருக்கியில் எதனால் நிலநடுக்கம் ஏற்பட்டது?
நில அதிர்வுகள் அதிகம் நடக்கக்கூடிய இடத்தில் துருக்கி அமைந்துள்ளது. அதனால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அங்கு வடமேற்கு பகுதியில் 1999ம் ஆண்டு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அப்போது இரண்டு நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 7.4 மற்றும் 7.0 என்ற அளவுகளில் பதிவானது. 18 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதுடன், 45 ஆயிரம் படுகாயமடைந்தனர். 2011ம் ஆண்டு வான் கிழக்கு நகரில் ஏற்பட்ட 7.1 என்ற அளவிலான நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்