Aditya L1: ஆதித்யா எல் 1 விண்கலத்தை ஏவும் திட்டம் 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது!
Sep 01, 2023, 02:05 PM IST
ஆதித்யா எல்.1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 வெற்றி அடைந்த நிலையில், உலகமே இந்தியாவை உற்றுப்பார்க்க தொடங்கியிருக்கிறது. தற்போது சூரியனை ஆய்வு செய்ய களமிறங்கி உள்ளது இஸ்ரோ. ஆதித்யா எல்.1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்காக 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது முதல் சோலார் மிஷன் ஆதித்யா-எல் 1 ஐ நாளை விண்ணில் செலுத்த உள்ளது. சூரியனை ஆராய்வதே இந்த பணியின் நோக்கமாகும். கொரோனல் வெப்பம், கொரோனல் வெகுஜன வெளியேற்றம், எரிப்புக்கு முந்தைய மற்றும் எரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பண்புகள், விண்வெளி வானிலையின் இயக்கவியல் மற்றும் துகள்கள் மற்றும் புலங்களின் பரவல் ஆகியவற்றின் சிக்கலைப் புரிந்துகொள்ள ஆதித்யா எல் 1 முக்கியமான தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் ஏவுதல் ஒத்திகையும், வாகனத்தின் உள் சோதனைகளும் நிறைவடைந்ததாக இஸ்ரோ சமீபத்தில் அறிவித்தது. "பி.எஸ்.எல்.வி-சி 57 / ஆதித்யா-எல் 1 மிஷன்: ஏவுவதற்கான ஏற்பாடுகள் முன்னேறி வருகின்றன. ஏவுதல் ஒத்திகை - வாகன உள் சோதனைகள் நிறைவடைந்தன ". என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஆதித்யா எல்1 விண்கலத்தை ஏவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆதித்யா எல் 1நிச்சயம் வெற்றி பெரும் என அதன் உந்து சக்தி திட திரவ என்ஜின் வடிவமைப்பு இயக்குனர் நாராணயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பூமியிலிருந்து சூரியன் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே எல் 1 என்ற பகுதியில் ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்பட உள்ளது. அதே சமயம் விண்கலத்தை நிலை நிறுத்துவது சவாலானது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்