தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Prithvi Shaw: செல்ஃபி விவகாரம் - நடிகை சப்னா கில்லுக்கு ஜாமின்

Prithvi Shaw: செல்ஃபி விவகாரம் - நடிகை சப்னா கில்லுக்கு ஜாமின்

Feb 20, 2023, 08:00 PM IST

google News
செஃல்பி எடுத்தபோது ரசிகர்கள் கும்பல் தாக்கிய விவகாரத்தில் ப்ருத்வி ஷா புகார் அளித்த சமூக வலைத்தள பிரபலமான சப்னா கில்லுக்கு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கி மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை சாந்தாகுரூஸ் நகரிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நண்பருடன் வெளியே வந்த இந்திய இளம் கிரிக்கெட் வீரரான ப்ருதிவி ஷாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சமூக வலைத்தள பிரபலமான சப்னா கில் மற்றும் அவரது நண்பர் முயற்சித்துள்ளனர்.

அப்போது அவர்களுடன் செஃல்பி எடுத்துக்கொண்டார் ப்ருத்வி ஷா. இதில் சில போட்டோக்கள் எடுத்தபின்பும் சப்னா கில்லுடன் வந்தவர்கள் அவரை விடாமல் போட்டோ எடுக்குமாறு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருத்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 8 பேர் கொண்ட கும்பல் ப்ருத்வி ஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ப்ருத்வி ஷா, சப்னா கில் ஆகியோர் ஒருவரையொருவர் தாக்குவது போல் விடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ப்ருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் தங்களது காரை அருகில் இருந்த சிக்னல் வரை பின் தொடர்ந்து வந்த பேஸ்பால் மட்டையால் தாக்கியதாகவும், ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஓஷிவாரா நகர போலீசார், சப்னா கில் உள்பட 8 பேரை கைது செய்தனர். இதையடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சப்னா கில் உள்பட 3 பேருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்தும், ஜாமின் வழங்க கோரியும் சப்னா கில் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு போலியானவை எனவும், எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் புனையப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சப்னா கில் உள்பட 3 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னதாக இந்த சம்பவத்தின்போது பிருத்வி ஷா, தன்னையும், நண்பர்களையும் சாலையில் அடிக்க முயற்சித்ததாக சப்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி