Velankanni: வேளாங்கண்ணி மாதாவிற்கு முடி சூட்டு விழா - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Jun 01, 2023, 12:08 PM IST
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இருக்கும் புனித ஆலயங்களில் உலகப் பிரசித்தி பெற்ற பேராலயமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காகத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநில ம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த பேராலயத்திற்கு வந்து செல்கின்றனர். கடற்கரை பகுதிக்கு அருகே இந்த பேராலயம் அமைந்துள்ளதால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா தளமாக இந்த பேராலயம் விளங்கி வருகிறது.
இந்த பேராலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டட அமைப்புகளின் பசலிக்கா என்னும் சிறப்பு அந்தஸ்தையும் இந்த ஆலயம் பெற்று விளங்கி வருகிறது.
இந்த பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாகக் கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது. இதன் காரணமாக மே மாதம் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக தங்களது நேர்த்திக் கடனை செலுத்த இந்த பேராலயத்திற்கு வருவார்கள்.
இதனைத் தொடர்ந்து மே மாதம் ஏழாம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் தேடுபவனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
இதன் சிகர நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதா குளத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடம் பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் உள்ள மாதாவின் சொரூபத்திற்குச் சூட்டப்பட்டது.
பின்னர் தேர் புனிதம் செய்யப்பட்டு பவனி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பல பங்குத்தந்தைகள் மற்றும் அருட்சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்