Karnataka Election Results: பாஜக மீது இவ்வளவு அதிருப்தியா? 8 சிட்டிங் அமைச்சர்கள் பின்னடைவு!
May 13, 2023, 12:24 PM IST
BJP Ministers: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த சோமண்ணா, பி.சி.நாகேஷ் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 122, பாஜக 67, மஜத 27 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இந்த தேர்தலில் பாஜக அமைச்சர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். தற்போது நிலவரப்படி பாஜகவைச் சேர்ந்த 8 அமைச்சர்கள் குறைந்த வாக்குகளைப் பெற்று பின்னடைவில் உள்ளனர்.
எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் பின்னடைவில் உள்ளார்.
வருணா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா பின்னடைவு சந்தித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
பாஜக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, சிமோகா தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட அசோக், ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் குமார் உள்ளிட்டோரும் பின்னடைவாக இருக்கின்றனர்
மேலும் திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் , கிருஷ்ணராஜ் பேட் தொகுதியில் போட்டியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடா, பீளகி தொகுதியில் போட்டியிட்ட தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி, பி.ஸ்ரீராமலு மற்றும் கோவிந்த கார்ஜோள் ஆகிய 8 அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்