தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  தெலங்கானா தமிழச் சங்கம் சார்பில் கோலகலமாக நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

தெலங்கானா தமிழச் சங்கம் சார்பில் கோலகலமாக நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

Aug 19, 2022, 05:42 PM IST

தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழா ஹைதராபாத் நகரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழா ஹைதராபாத் நகரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழா ஹைதராபாத் நகரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஹைதரபாத் நகரில் அமைந்துள்ள குக்கட்பள்ளி பகுதியில் இருக்கும் தனியார் ஹாலில் நடைபெற்ற இந்த விழா தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

காலையில் சங்க அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்ற நிலையில், மாலைப்பொழுதில் கலைநிகழ்ச்சிகளும் சிறுவர் சிறுமியர், பெண்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

கலை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் குத்துவிளக்கு ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் சங்கத்தின் தலைவர் போஸ் சிறப்புரை ஆற்றினார்.

இதைத்தொடந்து, திருவள்ளுவர் ஒளவை தமிழ் வாழ்வியல் மாநாட்டில் வைத்து தெலங்கானா தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த தமிழ்ச் சங்கத்துக்கான விருதை பொதுச் செயலாளர் ராஜ்குமார், சங்கத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

<p>தெலங்கானா தமிழ்ச் சங்கத்துக்கு கிடைத்து சிறந்த சங்கத்துக்கான விருது</p>

இந்த மாநாடு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் ஆகியவற்றுடன் தெலங்கானா தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தியது.

இதன் பின்னர் மாணவ-மாணவிகளின் கண்கவர் பரதநாட்டியம், சுதந்திர தின உரை, தமிழ் பாரம்பரிய நாட்டுப்புற கலையான களரி ஆகியவை நிகழ்த்தப்பட்டன. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஆடல் பாடல் என பல்சுவை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அரங்கேறியது.

கோலப் போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் படம் பதித்த கேடயம் பரிசாக வழங்கப்பட்டது, நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய அருணா குமாரராஜன், தி சென்னை சில்க்ஸ் நிர்வாகி ஜோசப் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் செயற்குழு உறுப்பினர் உமாகணேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார், நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி