தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  சுதந்திர தின சலுகையாக ரூ. 10 மட்டும் செலுத்தி கொச்சி மெட்ரோவில் பயணிக்கலாம்!

சுதந்திர தின சலுகையாக ரூ. 10 மட்டும் செலுத்தி கொச்சி மெட்ரோவில் பயணிக்கலாம்!

Aug 15, 2022, 12:49 PM IST

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ரூ. 10 மட்டும் செலுத்தி கொச்சி மெட்ரோ ரயிலில் அனைத்து ரயில்நிலையங்களுக்கும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ரூ. 10 மட்டும் செலுத்தி கொச்சி மெட்ரோ ரயிலில் அனைத்து ரயில்நிலையங்களுக்கும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ரூ. 10 மட்டும் செலுத்தி கொச்சி மெட்ரோ ரயிலில் அனைத்து ரயில்நிலையங்களுக்கும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ட்ரெண்டிங் செய்திகள்

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு கொச்சி மெட்ரோ தயாராகி உள்ளது. இதை முன்னிட்டு கொச்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு கலை நிகழச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு சலுகை கட்டணமாக ரூ. 10 செலுத்தி பயணம் மேற்கொள்ளும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கொச்சி மெட்ரோவுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களுக்கு எங்கு செல்ல வேண்டுமானாலும் ரூ. 10 மட்டும் செலுத்தினால் போதும்.

இந்த சலுகை விலை இன்று ஒரு நாள் மட்டும் நடைமுறைக்கு உள்ள நிலையில், காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் முக்கிய அம்சமாக பிளாஸ்டிக்கில் இருந்து விடுபெறும் விதமாக பருத்தியால் ஆன பைகள் பயணிகளுக்கு 10 ஆயிரம் பைகள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், நாட்டுப்பற்று பாடல்கள், நடனங்கள், மேஜிக் ஷோ, விளையாட்டு போட்டி என மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்தப்படவுள்ளன.

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி