தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Delhi: பிரபல ரவுடி படுகொலை - திருப்பி அனுப்பப்பட்ட தமிழக போலீசார்

Delhi: பிரபல ரவுடி படுகொலை - திருப்பி அனுப்பப்பட்ட தமிழக போலீசார்

May 08, 2023, 02:56 PM IST

google News
திகார் சிறையில் பிரபல ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு தமிழ்நாடு காவல் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
திகார் சிறையில் பிரபல ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு தமிழ்நாடு காவல் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திகார் சிறையில் பிரபல ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு தமிழ்நாடு காவல் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளில் டெல்லி திகார் சிறைச்சாலையும் ஒன்றாகும். பாதுகாப்பு அதிகமாக உள்ள இந்த சிறைச்சாலையில் கடந்த மே இரண்டாம் தேதி அன்று பிரபல ரவுடி சுனில் மான் என்கின்ற தில்லு தாஜ் பூரியா என்பவர் வெறி பிடித்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

சிறைச்சாலைக்குள் கொலை செய்யப்பட்ட இந்த சுனில் மான் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. யோகேஷ் துண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. திகார் சிறைச்சாலையில் பிரபல ரவுடி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது சிறைச்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான சில காட்சிகள் கடந்த மே 5ஆம் தேதி அன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபல ரவுடி சுனில் மான் அடித்துக் கொல்லப்பட்ட போது குறைந்தது பத்து காவல்துறையினர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. இந்த கொலையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விகாஸ் சிறைச்சாலை நிர்வாகம் இதுவரை 30 உதவி கண்காணிப்பாளர் உள்பட ஒன்பது அலுவலர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த ஏழு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தற்போது அந்த தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தயார் செய்து திகார் சிறைச்சாலை நிர்வாகம் டெல்லி துணைநிலை ஆணையருக்குச் சமர்ப்பித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி