தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Earthquake In Arunachal Pradesh: அருணாச்சலில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Earthquake in Arunachal pradesh: அருணாச்சலில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Karthikeyan S HT Tamil

Nov 10, 2022, 02:50 PM IST

google News
அந்தமான், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (நவ.10) நிலநடுக்கம் உணரப்பட்டது. அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.31 மணியளவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும், இதுவரை எந்தவித சேதமும் ஏற்பட்டவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரில் இன்று ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பாக ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், நிலநடுக்கமானது போர்ட் பிளேரின் தென் கிழக்கே அதிகாலை 2.29 மணி அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் நேற்று (நவ.09) நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் தில்லி, மணிப்பூர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.

அடுத்த செய்தி