Heroin seized in kerala: ரூ.400 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் பறிமுதல்
Oct 07, 2022, 01:06 PM IST
கேரள கடல் பகுதியில் ரூ. 400 கோடி மதிப்பிலான 200 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கொச்சி: கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் ரூ. 400 கோடி மதிப்பிலான 200 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடற்படை அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஈரான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படை உதவியுடன் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுவினர் கொச்சி கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த கப்பலை மடக்கி பிடித்து சோதனை செய்தனா். அதில், கப்பலில் இருந்தவர்களிடம் எந்த ஒரு முறையான ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் வந்த கப்பலை கடற்படையினர் பறிமுதல் செய்து சோதனை நடத்தியபோது அதில் சுமார் ரூ. 400 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கப்பலைக் கொச்சிக்குக் கொண்டு சென்று போதை தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக 6 பேரை கைது செய்துள்ள போதை தடுப்பு பிரிவினர் அவர்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்