Jerusalem: ஜெருசலேமில் சரமாரி துப்பாக்கி சூடு..பெண் பலி, 8 பேர் படுகாயம்!
Nov 30, 2023, 01:28 PM IST
ஜெருசலேமில் இன்று காலை பயங்கர ஆயுதங்களுடன் வந்த இருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகினார். 8 பேர் படுகாயமடைந்தனர்.
ஜெருசலேம் நகரின் நுழைவு பகுதியில் இன்று (நவ.30) காலை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும். 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் என்ற ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. எனினும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இன்று காலை ஜெருசலேமில் வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதுபோன்ற கொடூரமான வன்முறைகளை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்" என்று தூதர் ஜாக் லூ கூறினார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 7-வது நாளாக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நவம்பர் 24-ம் தேதியில் இருந்து தற்போது வரை 97 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இஸ்ரேல் சிறையில் இருந்து 180 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்