Yoga For Six Pack: தினமும் இந்த மூன்றே யோகாசனங்களால் சிக்ஸ் பேக் உடல்வாகு கிடைக்குமா!
Jun 17, 2023, 09:46 PM IST
தினமும் இந்த மூன்றே யோகாசனங்களால் சிக்ஸ் பேக் உடல்வாகு கிடைப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
யோகாசனங்கள் காலங்காலமாக நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தந்து வருகிறது. யோகாசனத்தை முறையாக தினமும் செய்துவந்தால் உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெறுவதுடன் தசைகளில் நெகிழ்வுத் தன்மை உண்டாகிறது. இதனால் எந்தவொரு கஷ்டமான வேலைகளையும் எளிதாகச் செய்ய முடியும். அதற்கேற்ப உடல் வளைந்து தரும்.
உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு யோகாசனங்கள் நல்ல தீர்வாக இருக்கிறது. உடல் எடையைக் குறைப்பதற்கும் உடலை வலுவாக வைத்திருக்கவும் யோகாசனங்கள் உதவுகின்றன.
சில குறிப்பிட்ட யோகாசனங்களை செய்தால் உடலில் உள்ள ஊழைச்சதைகள் வெகு சீக்கிரமே குறைந்து விடுகின்றன.
இன்றைய இளைஞர்களுக்கு கட்டுக்கோப்பான உடல்வாகு மிகவும் பிடித்துள்ளது. இதற்காக பெரும்பாலானவர்கள் ஜிம்முக்குச் சென்று பளுதூக்கும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஆனால் மூன்றே யோகாசனத்தை தினமும் செய்துவந்தால் அவர்கள் விரும்பும் சிக்ஸ் பேக் உடற்கட்டை சீக்கிரமே அடையலாம்.
சிக்ஸ்பேக் வயிற்றைப் பெற உதவும் யோகாசனங்கள் -
ஹாலாசனம்
ஹாலாசனம் என்பது உங்கள் வயிற்று தசைகளை டோன் செய்ய மிகவும் ஏற்றது. ஆனால் இந்த ஆசனத்தைச் செய்ய உங்கள் உடலுக்குப் போதுமான நெகிழ்வுத்தன்மை இருக்கிறதா என்று முதலில் ஒரு யோகக்கலை ஆசிரியரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு தசைக்குள் காயம் ஏற்படலாம்.
ஹலாசனம் என்பது மல்லாந்து படுத்துக்கொண்டு இரு கால்களையும் தூக்கி பின்புறம் வளைத்து கால் விரல்களால் மறுபுறம் தரையைத் தொடும் வரை கால்களை வளைக்கவும். உங்கள் கைகளைப் பயன்படுத்தி, உங்கள் இடுப்புக்கு ஆரம்பக்கட்டத்தில் அழுத்தம் தரலாம். மெதுவாக மூச்சு விடவும், உங்களால் முடிந்தவரை அதே நிலையில் இருக்கவும். பிறகு இரண்டு கால்களையும் ஆரம்ப நிலைக்கு மீண்டும் கொண்டு வரவும். இதே நிலையை வைத்திருக்கும்போது, உங்கள் கைகளை இரண்டு புறமும் விரித்து வைக்கலாம். இந்த ஆசனத்தை சில நிமிடங்கள் இடைவெளி விட்டு 5 முறை செய்ய வேண்டும்.
நவாசனம்
நவாசனம் என்பது படகு போல உடலை வளைப்பதாகும். உட்கார்ந்தபடி சிறிது மேற்புற உடலை பின்புறமாக சாய்க்க வேண்டும். அதேவேளையில் உங்கள் இருகால்களையும் மேலே நோக்கித் தூக்க வேண்டும்.
உடலின் மையப்பகுதியில் கொழுப்பைக் குறைப்பதற்கு இந்த ஆசனம் மிகவும் ஏற்றது. யோகா விரிப்பில் உட்கார்ந்து, கால்களை உங்களுக்கு முன்னால் நீட்டவும். கைகளை இடுப்புக்கு சற்று கீழே வைத்திருக்கவும். பின்னோக்கி சாயவும், ஆனால் முதுகெலும்பை வளைக்கக் கூடாது. மூச்சை வெளியே விட்டு, உங்கள் கால்களை தரையில் இருந்து 45 டிகிரி கோணத்துக்கு உயர்த்த வேண்டும். முட்டிகளை மடக்காமல் வைத்து, உங்கள் கால் விரல்களை உங்கள் கண்கள் உயரத்துக்கு உயர்த்தவும் - அவை ஆங்கில வி போன்று இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த ஆசனத்தை சில நிமிடங்கள் இடைவெளி விட்டு 5 முறை செய்ய வேண்டும்.
மத்யாசனம்
மத்யாசனம் என்பது சாதாரணமாக சப்பணமிட்டு ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டபடி மல்லாந்து சாய்ந்து படுக்க வேண்டும். கால்கள் இரண்டும் பின்னப்பட்டிருக்க வேண்டும். ஆதாரத்துக்கு இருகால்களையும் உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளலாம்.
அடிவயிற்றுப் பகுதியை இறுக்கமாக்க இது மற்றொரு சிறந்த ஆசனம். உங்கள் முதுகு தரையில் படுமாறு விரிப்பில் படுக்கவும், முட்டிகளை வளைத்து, உங்கள் பாதங்கள் தரையில் படுமாறு வைக்கவும். மூச்சை இழுத்து, உங்கள் இடுப்புப் பகுதியை தரையில் இருந்து மேலே உயர்த்தவும். உங்கள் உள்ளங்கைகளை உங்கள் இடுப்புக்கு கீழே வைக்கவும். உங்கள் மொத்த இடுப்புப் பகுதியையும் கைகளின் மேல் வைக்கவும். மூச்சை இழுத்து, உடலின் மேல் பகுதியையும் உயர்த்தி, மேட்டில் இருந்து நகர்த்தவும். மூச்சை வெளியே விட்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும்.
இந்த ஆசனத்தையும் சில நிமிடங்கள் இடைவெளி விட்டு 5 முறை செய்யுங்கள்.
மேற்கண்ட 3 ஆசனங்களையும் செய்தால் நீங்கள் நினைக்கும் சிக்ஸ் பேக் வந்து விடும். இது பெண்களுக்கும் ஏற்ற ஆசனம். இடுப்பு, வயிறு, தொடைகளில் உள்ள தேவையற்ற சதை சரசரவென குறைந்து கட்டழகான உடல்வாகைப் பெறலாம்.
டாபிக்ஸ்