தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Diet: மஞ்சள் பூசணி வேர்க்கடலைக் கூட்டு செய்முறை

Healthy Diet: மஞ்சள் பூசணி வேர்க்கடலைக் கூட்டு செய்முறை

I Jayachandran HT Tamil

Mar 31, 2023, 11:32 PM IST

மஞ்சள் பூசணி வேர்க்கடலைக் கூட்டு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
மஞ்சள் பூசணி வேர்க்கடலைக் கூட்டு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

மஞ்சள் பூசணி வேர்க்கடலைக் கூட்டு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

மஞ்சள் பூசணியும், வேர்க்கடலையும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்தவை. இவை இரண்டையும் வைத்து செய்யும் மஞ்சள் பூசணி வேர்க்கடலை கூட்டு சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Benefits of Beer : என்ன பீர் குடித்தால் உங்களின் வாழ்நாள் நீடிக்குமா? எப்படி குடிக்கவேண்டும்? – வழிகாட்டி

Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!

Tea : 'ஒரு டீ சாப்பிடலாமா சார்.. இந்த வார்த்தைக்கு பின்னாடி இத்தனை கதை இருக்கா' தேநீர் என்றும் நமக்கு சுவையான பானம்தான்!

Benefits of Bottle Guard : கோடையில் இந்த ஒரு காய் மட்டும் போதும்! உடலில் தண்ணீர் சத்து குறையாது!

மஞ்சள் பூசணி வேர்க்கடலை கூட்டு செய்யத் தேவையானவை:

மஞ்சள் பூசணி - 1/4 கீற்று

வறுத்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (தோல் நீக்கியது)

காய்ந்த மிளகாய் - 3

உப்பு - தேவைக்கு

மஞ்சள் பூசணி வேர்க்கடலை கூட்டு செய்முறை:

பூசணியை சிறுசிறு துண்டு களாக நறுக்கி,ஒரு கெட்டியானப் பாத்திர த்தில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

மிளகாயை வெறும் வாணலியில் போட்டு சூடாகியதும் எடுத்து ஆறியதும் வேர்க் கடலை யுடன் சேர்த்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

காய் அடிப் பிடிக்காமல் கிண்டி விடவும். காய் வேகும் போதே தண்ணீர் விட்டுக் கொள்ளும்.

நன்றாக வெந்த பிறகு உப்பு சேர்த்துக் கிளறி விடவும். முதலிலேயே உப்பு சேர்த்தால் காயின் அளவைப் பார்த்து நிறைய சேர்த்து விடுவோம்.

இது நீர்க்காய் என்பதால் வெந்த பிறகு அளவு குறைந் திருக்கும். இப்போது பொடித்து வைத் துள்ளப் பொடியைக் காயுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு இறக்கவும்.

இதை சாதாரண கூட்டு போலவே சாதத்துடன் சேர்த்து அல்லது தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.

டாபிக்ஸ்