World Elephant Day 2024 : நிலத்தின் பேருயிர் காக்கப்படுவதன் அவசியம் என்ன தெரியுமா? உலக யானைகள் தின கருப்பொருள்!
Aug 12, 2024, 06:52 AM IST
World Elephant Day 2024 : நிலத்தின் பேருயிர் காக்கப்படுவதன் அவசியம் என்ன தெரியுமா? உலக யானைகள் தினத்தின் கருப்பொருள், யானைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
உலக யானைகள் தினம் உலகம் முழுவதிலும் ஆகஸ்ட் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள பேருயிரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அவற்றை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறுவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
யானைகளின் வாழிடம் குறைவு, அதன் தங்களுக்கு உள்ள கள்ளச்சந்தை, மனித – யானை மோதல், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், இந்த பேருயிரை இந்த நிலத்தில் தக்கவைப்பதன் முக்கியத்துவம் என இந்த நாளில் பல்வேறு பிரச்னைகளை அலசுவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். யானைகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நலன் ஆகியவை குறித்த முன்னெடுப்புகள் இந்த நாளில் செய்யப்படுகிறது.
கருப்பொருள் 2024
உலக யானைகள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள் ‘வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், இறையியல் தொடர்பு என்பதை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
இந்த கருப்பொருள், யானைகளின் இயற்கை வாழிடங்களை பாதுகாத்து அவற்றின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அடிக்கோடிட்டு காட்டுவதாகும். யானைகள் வழிடத்தை பாதுகாப்பதன் முக்கிய காரணிகள் என்னவென்பதை இந்த நாள் முன்னிலைப்படுத்துகிறது.
குறிப்பாக யானைகளின் எண்ணிக்கை குறைந்துவரும் இந்த காலகட்டத்தில் அதன் முக்கியத்துவம் என்னவென்பதை வலியுறுத்துவது அவசியம். வாழிடங்களை பாதுகாப்பது, யானைகள் வாழும் சூழலை உருவாக்குவது, அவற்றின் எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்வதாரத்தை உறுதி செய்வது இந்த கருப்பொருளின் அர்த்தம் ஆகும்.
இந்த பூமிக்கு யானைகள் ஏன் அவசியம்?
யானைகள் காடுகளையும், புல்வெளிகளையும் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை விதைகளை தாங்கள் செல்லும் வழியெங்கும் விதைக்கின்றன. இதனால் பல காடுகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் செரிமான மணடத்தால் காடுகள் செழிக்கின்றன.
உலகம் முழுவதிலும் சுற்றுலா பயணிகளுக்கு யானைகள் தேவை. அவர்களை கவர்ந்து இழுப்பதால் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைகிறது. சுற்றுலாத்துறையில் யானைகளின் பங்களிப்பு அளப்பரியது. அவை சுற்றுலாத்துறைக்கு வருமானத்தை மட்டும் ஈட்டிதருபவை அல்ல, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகின்றன.
கள்ளச்சந்தை
யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக சட்டத்துக்கு புறம்பாக வேட்டையாடப்படுகின்றன. இது யானைகளின் பெரும் சவாலாக உள்ளது.
அண்மை காலத்தில், 2010 முதல் 2012ம் ஆண்டு வரை கிட்டத்தட் ஒரு லட்சம் யானைகள் கொல்ப்பட்டுள்ளன.
அதன் தந்தங்களுக்கு உள்ள தேவைகளால் இந்த வேட்டைகள் நடத்தப்படுகின்றன. இந்த தந்தங்களைக் கொண்டு வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள் மற்றும் கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
யானைகளை சட்ட விரோதமாக கொல்வதற்குப் பின்னால் இந்த மதிப்புமிக்க யானை தந்தங்கள் உள்ளன.
யானை தந்த வணிகம்
1989ம் ஆண்டு, அழிந்துவரும் இனங்களின் சர்வதேச சந்தை மையம், உலகம் முழுவதிலும் தந்த விற்பனைக்கு தடை விதித்தது. இந்த தடையையும் கடந்து, சட்ட ரீதியான தந்த விற்பனை சில நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஜப்பான் போன்ற நாடுகிளல், இந்த சட்டவிரோத கள்ளச்சந்தை லாபகரமான தொழிலாக உள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள ஆண் மற்றும் பெண் இரண்டு யானைகளுக்கும் தந்தங்கள் உள்ளன. ஆனால், ஆசியாவில் ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. வேட்டையின் பாதிப்பாலா அல்லது வேறு காரணங்களாலா என்று தெரியவில்லை, இப்போது பிறக்கும் ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருப்பதில்லை என்பது சுவாரஸ்யமான தகவலாக உள்ளது. இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்ட மரபணு மாற்றமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளில் 2013ம் ஆண்டு தந்தங்கள் அதிகளவில் கடத்தப்பட்டன.
2016ம் ஆண்டு கென்யா சட்ட விரோதமான தந்த கடத்தலுக்கு எதிராக ஒரு வலுவான முடிவை எடுத்தது. அதற்காக ஒரு வரலாற்று நிகழ்வை நடத்தியது. சட்ட விரோத தந்தக்கடத்தலை கட்டுப்படுத்த 105 டன் தந்தங்களை எரித்து அழித்தது. வரலாற்றின் பெரிய தந்த எரிப்பு நிகழ்ச்சியாக இது பார்க்கப்பட்டது. இதனால் சட்டவிரோதமான தந்த வணிகத்தை எதிர்த்து யானைகளை பாதுகாப்பை கென்யா உறுதிப்படுத்தியது.
ஏன் ஆகஸ்ட் 12
இற்த நாள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இதனால் இந்த நாள் உலக யானைகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் மழைக்காலத்தில் வருகிறது. இந்த நாள் உலகளவில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய யானைகளுக்கு உள்ள அச்சுறுத்தலை முன்னிறுத்தி பேசுகிறது.
யானைகளை பாதுகாக்க நாம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று இந்த நாள் அறிவுறுத்துகிறது. வாழிடம் இழப்பு, விலங்குகளின் அழிவுக்கு முக்கிய காரணமாகிறது. உலகம் முழுவதிலும் உள்ள விலங்கு ஆர்வலர்கள் இந்த நாளில் இணைந்து, எதிர்காலத்தில் காடுகளை காத்து, சுற்றுச்சூழல் சமநிலை பேண வேண்டுமெனில் யானைகள் அதற்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்