White Hairs Reasons : எச்சரிக்கை நரை முடிக்கு இதுதான் முக்கிய காரணம்.. உணவில் கவனம்
Jan 26, 2024, 12:51 PM IST
Bad Habits Effects Hairs : எல்லா வயதினரும் வெள்ளை முடி பிரச்சனையால் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்கங்கள் தான்.
இந்த காலகட்டத்தில் முடி பிரச்சனைகள் பலருக்கும் உள்ளது. இதனால் பலர் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் நமது பழக்கவழக்கங்கள்தான் முடி ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம். சரியான வாழ்க்கை முறை இருந்தால்.. முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். முடி நரைப்பது மரபியல் சார்ந்தது. சில சமயங்களில் நாம் பயன்படுத்தும் பொருட்களும் அதை பாதிக்கிறது. இது தவிர, நமது அன்றாட வழக்கத்தில் ஏற்படும் சில தவறுகள் சிறு வயதிலேயே முடி நரைக்க காரணமாகிறது.
நம் தாத்தா, பாட்டி காலத்தில் நாற்பது வயதுக்கு மேல்தான் முடி நரைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி முடி நரைத்து விடுகிறது. இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளம் வயதிலேயே பலர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சந்தையில் பல்வேறு பொருட்கள் கிடைக்கின்றன. இவை பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நரை முடிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஹேர் கலரிங் ட்ரெண்ட்
இந்த நாட்களில் ஹேர் கலரிங் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதற்கு பெரும்பாலான சாயங்கள் ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இது முடியை சேதப்படுத்தும். இது முடியின் இயற்கையான பளபளப்பைக் குறைத்து, முடி உதிர்வதற்கு வழிவகுக்கிறது. சந்தையில் கிடைக்கும் முடி தொடர்பான பொருட்களைப் பயன்படுத்துவதால் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும்.
பலர் தங்கள் தலைமுடியை பளபளப்பாகவும், பட்டுப் போலவும் மாற்ற, ரீபாண்டிங், ஸ்மூத்திங், கெரட்டின் போன்ற முடி சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த சிகிச்சையின் போது பல்வேறு வகையான ரசாயனங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது முடியின் வேர்களை வலுவிழக்கச் செய்கிறது. அதுமட்டுமின்றி முடி உதிர்தல், நரை முடி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
உணவு
ஆரோக்கியமான தோல், நகங்கள் மற்றும் முடியை பராமரிக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு அவசியம். உங்கள் உணவு சத்தானதாக இல்லாவிட்டால், உடலில் வைட்டமின் பி12, தாமிரம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் பிற சத்துக்கள் குறையும். இது முடி முன்கூட்டியே நரைக்க வழிவகுக்கிறது. உங்கள் உணவில் எப்போதும் சத்தான உணவை வைத்துக் கொள்ளுங்கள்.
தற்போது பல இளைஞர்கள் இதற்கு அடிமையாகி உள்ளனர். புகைபிடிப்பதால், ரத்தம் சரியாக முடியின் வேர்களுக்குச் செல்லாமல், முடி உதிர்தல், நரைத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படத் துவங்கும். மற்ற உடல்நலப் பிரச்சனைகளும் புகைபிடிப்பதால் வரும்.
முடி நரைப்பதைத் தடுக்க பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்களைச் சாப்பிட வேண்டும். இது தவிர சூரியகாந்தி விதைகள், பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் முடி நரைப்பதைத் தடுக்கலாம்.
ரசாயனங்கள் நிறைந்த முடி தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம். கூந்தல் பொருட்களில் உள்ள சல்பேட்டுகள், முடிக்கு சில நன்மைகளை அளிக்கும் அதே வேளையில், கூந்தலை வறண்டு, சேதமடையச் செய்கிறது. இது முடியை வெள்ளையாக மாற்றும். எனவே சல்பேட் இல்லாத முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
அதிக அழுத்தம் முடியை பாதிக்கிறது. தூக்கமின்மை, பதட்டம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
இதனால் படிப்படியாக கருப்பு முடி வெள்ளையாக மாறும். அதனால் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் தியானம் செய்ய வேண்டும். சரியாக தூங்க வேண்டும்.