First Aid for Dog Bite : நாய் கடித்தால் உடனடியாகச் செய்ய வேண்டிய முதலுதவிகள்
Jun 03, 2023, 03:08 PM IST
மனிதர்களை நாய் கடித்தால் முதலில் செய்ய வேண்டிய முதலுதவி குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் வாழும் பகுதிகளில் தெருநாய்கள் வசிக்காத இடமே இல்லை. பெரும்பாலான நாய்கள் மக்களை கண்டால் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் சில நாய்கள் மனிதர்களை கண்டால் கடித்து விடும். அதற்கு உடனடியாக சில முதலுதவிகளை செய்துவிட்டு மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம். தவறினால் மரணம்கூட ஏற்படலாம்.
இந்தியாவில் தினமும் லட்சத்துக்கும் மேலானவர்கள் நாய்கடிக்கு ஆளாவதாக புள்ளி விவரம் கூறுகிறது. தெருக்களில் செல்லும் போது, இரவு நேரங்களிலும், குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வெறி நாய்கள் கடிப்பது அடிக்கடி நிகழ்வது தொடர் கதையாக மாறியுள்ளது. ஒருவேளை நாய் கடித்தால் மக்கள் அச்சம் அடையாமல் முதலில் செய்ய வேண்டிய முதலுதவி குறிப்புகளை பற்றி இப்போது பார்ப்போம்.
நாய்கடித்த உடனே தண்ணீரில் அந்த இடத்தை சுத்தம் செய்வது மிக மிக அவசியம். இப்படி செய்தால் தொற்று மற்ற இடங்களில் வேகமாக பரவுவது குறையும். குழாயை திறந்து விட்டு கொட்டு நீரில் சுத்தம் செய்யவும்.
வெயிலில் நிற்கவும்
நாய் கடித்த பின்பு சூரிய வெளிச்சத்தில் நிற்பது நல்லது. அந்த உடத்தில் நீங்களாகவே கட்டு கட்டி மூடி விட கூடாது. ரத்தம் வடிந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு சூரிய ஒளி படும்படி சிறிது நேரம் வெளியில் நிற்க வேண்டும். பின்பு மருத்துவனை செல்லவும்.
ஆன்டிசெப்டிக்
நாய் கடித்த இடத்தை நீரில் கழுவிய பின்பு அந்த இடத்தில் ஏதேனு ஒரு ஆன்டிசெப்டிக் மருந்தை தடவ வேண்டும். அந்த இடத்தில் மருந்தை தடவி விட்டு கட்டு போட்டு மூட கூடாது. காற்று மற்றும் சூரியஒளி படும்படி திறந்து வைக்கவும்.
தடுப்பூசி
நாய்கடிக்கு தடுப்பூசி செலுத்தி கொள்வது மிக மிக அவசியம். ரேபிஸ் தடுப்பூசிகளை நாய் கடித்த நாள் மற்றும் 3, 7, 14 மற்றும் 28 ஆகிய என 5 நாட்களுக்கு போடப்படுகின்றன. வீட்டு நாய் கடித்தாலும் கூட அலட்சியம் காட்டக்கூடாது. தடுப்பூசிகளை கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
பொதுவாகவே நாய்கடிக்கு ஆளானவர்கள் இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் கிழங்கு வகைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம் தவிர்க்க வேண்டும். அதே போல், ஹோட்டல் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
டாபிக்ஸ்