தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘கன்னம் சுருங்கிட நீயும்; மீசை நரைத்திட நானும்’ அத்தனை ஆண்டுகள் ஏன் வாழ முடிவதில்லை! ‘Grey Divorce’ என்றால் என்ன?

‘கன்னம் சுருங்கிட நீயும்; மீசை நரைத்திட நானும்’ அத்தனை ஆண்டுகள் ஏன் வாழ முடிவதில்லை! ‘Grey Divorce’ என்றால் என்ன?

Priyadarshini R HT Tamil

Nov 22, 2024, 11:03 AM IST

google News
சமூகத்தில் அதிகரித்து வரும் க்ரே டைவோர்ஸ்கள் குறித்த ஓர் அலசல்.
சமூகத்தில் அதிகரித்து வரும் க்ரே டைவோர்ஸ்கள் குறித்த ஓர் அலசல்.

சமூகத்தில் அதிகரித்து வரும் க்ரே டைவோர்ஸ்கள் குறித்த ஓர் அலசல்.

50 வயதுக்கு மேல் செய்யப்படும் விவாகரத்துக்கள், குறிப்பாக திருமணமாகி 20 அல்லது 30 ஆண்டுகள் கழித்து செய்யப்படும் விவாகரத்துக்கள், திருமணமாகி, தங்கள் குழந்தைகளுக்கு திருமணமாகும்போது, இந்த விவாகரத்துக்கள் ஏன் நடைபெறுகிறது. அண்மைக்காலமாக திருமண பந்தத்தில் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து வாழ்ந்துவிட்டு, பிரிந்துவரும்போக்கு அனைத்து தரப்பிலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரபலங்கள் பிரிந்து வருவதால், இதுகுறித்து நாம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். இது தற்காலத்தில் அதிகரித்து வருவதாவும், அதனால் இந்த டாபிக்கில் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டதாலோ அல்லது வாழ்நாள் அதிகரித்துவிட்டதாலோ அல்லது சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாலோ இந்த நிலை ஏற்படுகிறது. அதில் உள்ள சட்ட சவால்களாக சொத்துக்களை பிரித்துக்கொள்வது, ஜீவனாம்சம் மற்றும் ஓய்வுக்கால நலன்கள் என உள்ளது.

50 வயதுக்கு மேல் விவாகரத்தை கோருவது க்ரே டைவோர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அந்த வயதில் அவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இந்த நிலை ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. இன்று உலகம் முழுவதிலும் பொதுவாக நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த க்ரே டைவோர்ஸ் என்பது இந்தியாவில் அதிக கவனம் பெற்று வருகிறது. இந்தியாவில் பாரம்பரியமாக திருமணம் என்பது நீண்டகாலம் அர்ப்பணிப்பாக கருதப்படுகிறது. வயதான தம்பதிகள் பல்வேறு குடும்ப பிரச்னைகளுடனும் சேர்ந்து வாழவேண்டும் என்ற சமூக அழுத்தத்தைக் கொடுக்கிறது. மேலும் அவர்களுக்கு விவாகரத்து குறித்த களங்கமும் காரணமாகிறது.

பொருளாதார சுதந்திரம்

எனினும் சமூக மாற்றம், வாழ்நாள் அதிகரிப்பு, தனிப்பட்ட நிறைவு மற்றும் பொருளாதார சுதந்திரம் என அனைத்தும் இந்த க்ரே டைவோர்ஸ்கள் அதிகரிக்கக் காரணமாகின்றன. பெண்களிடம் உருவாகியுள்ள பொருளாதார சுதந்திரம் குறிப்பிடத்தக்க அளவு பங்கு வகிக்கிறது. பெண்கள் அதிகம் உழைக்கும்போது, அது அவர்களுக்கு பொருளாதார நிலைத்தன்மையைத் தருகிறது. பொருளாதார பாதுகாப்பை அடைவதற்கு அவர்கள் தங்களின் கணவர்களை சார்ந்திருக்கவேண்டிய தேவையில்லை. இந்த பொருளாதார சுதந்திரம் அவர்களை முன்னேற்றுகிறது. இதனால் அவர்களால் தனியாக முடிவெடுக்க முடிகிறது. இதனால் திருமண வாழ்வில் அவர்களுக்கு உள்ள மகிழ்ச்சி, நிறைவு அடிப்படையில் முடிவெடுக்க அவர்களுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கிறது. தேவை என்பதை கருத்தில்கொள்ள தேவையில்லை.

வாழ்நாள் நீட்டிப்பு

மேலும் மருத்துவத்துறையின் வளர்ச்சிகளினால், மனிதனின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 மற்றும் 60களைக் கடந்து நீண்ட எதிர்காலம் உள்ளது. அப்போது தனிப்பட்ட தேவை மற்றும் புதிய துவக்கங்களுக்காகவும் விவாகரத்தை தம்பதிகள் தேர்வு செய்கிறார்கள். தனித்தன்மையை ஏற்கும் கலாச்சார மாற்றம் மற்றும் தன்னிறைவும் முக்கிய பங்கு வகிக்கிறது. வயோதிகர்கள் தங்களின் உணர்வு நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தனிப்பட்ட வளர்ச்சியையும் கருத்தில்கொள்கிறார்கள்.

சட்டம்

இளம் வயதில் நடக்கும் விவாகரத்துக்களில் உள்ள சட்ட சவால்களைவிட வயோதிக காலத்தில் ஏற்படும் விவாகரத்துக்களில் சட்ட சவால்கள் அதிகம் உள்ளது. சொத்துக்களை பிரித்தல், ஜீவனாம்சம், ஓய்வுக்கால பலன்கள் ஆகியவை முக்கிய பிரச்னைகளாகின்றன. பல காலமாக சேர்ந்திருப்பதால் தம்பதிகள் சேர்ந்து சில சொத்துக்களை வாங்குகிறார்கள். அதை சரிசமமாக பிரிப்பதில், சிக்கல் ஏற்படுகிறது. அதில் சர்ச்சைகளும் ஏற்படுகிறது.

மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்து விவகாரத்து சட்டங்கள் உள்ளன. இந்து திருமணச்சட்டம் 1955 மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954, இந்த சட்டங்கள் சொத்துக்களை பிரித்துக்கொள்வது, ஜீவனாம்சம் வழங்குவது மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு வழிவகை செய்கிறது. க்ரே டைவோர்ஸ்கள் சில சட்ட அணுகுமுறைகளுக்கு முக்கியமானது. குறிப்பாக ஓய்வுக்கால பலன்கள் மற்றும் நீண்ட கால பொருளாதார பாதுகாப்பு ஆகியவை குறித்து க்ரே டைவோர்ஸ்களுக்கு தேவை.

ஜீவனாசம் அல்லது பராமரிப்பு க்ரே டைவோர்ஸ்க்கு மிகவும் முக்கியம். திருமணத்தின் கால அளவு, வயது மற்றும் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பொருளாதார நிலை இவற்றையெல்லாம் நீதிமன்றங்கள் கணக்கில்கொண்டு செயல்படவேண்டும். வயதான பெண்கள் குடும்ப பராமரிப்புக்காக தங்களின் வேலையை இழந்திருந்தால், அவர்களுக்கு விவகாரத்துக்குப்பின்னர், பொருளாதார நிலைத்தன்மை தேவைப்படுகிறது. எனவே அவர்களுக்கு ஜீவனாம்சம் முக்கியம்.

பென்சன் மற்றும் ஓய்வூதியக்கால நன்மைகள் என அனைத்தும் சட்ட சவால்களை உருவாக்குகின்றன. எனவே இவற்றை சமமாகி பகிர்ந்துகொடுக்கவும் நீதிமன்றம் முன்வரவேண்டும். இருவரும் பலன்கொடுப்பதாக இருக்கவேண்டும். கூடுதலாக, சுகாதாரம், இன்சூரன்ஸ் மற்றும் அவசர கால உதவி குறிப்பாக மருத்துவ தேவைகள் உள்ளவர்கள் என அனைத்து அடிப்படையையும் அலசி ஆராய்ந்து இருவருக்கும் ஏற்றதை நீதிமன்றங்கள் செய்யவேண்டும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை