Weight Loss Tips: இந்த குளிர் நாட்களிலும் உடல் எடையை குறைக்கலாம். இந்த உணவுகளை மறக்காதீங்க!
Dec 12, 2023, 09:00 AM IST
பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
குளிர்காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடாமல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. மெட்டபாலிசத்தை அதிகரிக்க எளிய குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடைஎன்பது பலரின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பெரும்பலான மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது. அதே சமயம் ஜங்க் புட் எடுத்து கொள்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகும். பலர் உடல் எடையை குறைக்கும் விருப்பமா அது குறித்து இங்கு பார்க்கலாம்.
பலர் குளிர்காலத்தில் அதிக உணவை சாப்பிட்டு உடனடியாக உடல் எடையை அதிகரிக்கிறார்கள். இருப்பினும், குளிர்காலத்தில் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பல உணவுகளை உணவில் வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்திலும் கொழுப்பு நம் உடலில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள சில தந்திரங்களை தெரிந்து கொள்வோம்.
முட்டை
முட்டையில் பி, பி12, பி5, புரதம் மற்றும் கொழுப்பு உள்ளது. முட்டை சாப்பிடுவது பசியை குறைக்க உதவும். இதனால் அதிக அளவில் உணவு எடுத்து கொள்வதை தடுக்கலாம். இது நம் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனால் தினமும் ஒரு நபர் இரண்டு முதல் 3 முட்டைகளை எடுத்து கொள்ளலாம்.
அவகோடா
அவகோடா பழம் வெண்ணெய் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அவகோடா பழத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின் சி, ஈ, கே மற்றும் பி நிறைந்துள்ளன. அவகோடாவில் நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன, அவை எடை குறைக்க உதவும்.
நட்ஸ்
பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
மீன்
சால்மனில் பி வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
சியா விதைகள்
சியா விதை மிகவும் பயனுள்ள மூலப்பொருள். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி2, வைட்டமின் பி12 இருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காய்கறி சூப்
காய்கறிகள் உடலுக்கு நல்லது என அனைவருக்கும் தெரியும். அதேபோல் இந்த குளிர்காலத்தில் தினமும் காய்கறி சூப்களை எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகளில் மருத்துவ குணம் உள்ளது. இந்நிலையில் குளிர்காலத்தில் சூடாக காய்கறி சூப்பில் மிளகு தூள் சேர்த்து குடிப்பது இதமாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்