நல்ல காரமான காலை, மதியம், இரவு உணவுகள் சாப்பிடவேண்டுமா? இதோ வீட்டிலே பச்சை மிளகாய் வளருங்கள்!
Oct 18, 2024, 08:00 AM IST
நல்ல காரமான காலை, மதியம், இரவு உணவுகள் சாப்பிடவேண்டுமா? எனில் இதோ வீட்டிலே பச்சை மிளகாய் வளருங்கள். எப்படி பராமரித்து பச்சை மிளகாய்ச் செடியை வளர்க்கவேண்டு என்று பாருங்கள்.
பச்சை மிளகாயை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். பச்சை மிளகாயை வீட்டிலே வளர்க்க முடியும். அதற்கு விதைகளை தூவியும் வளர்க்கலாம் அல்லது செடியை நட்டு வைத்தும் வளர்க்கலாம். பச்சை மிளகாய்க்கு பராமரிப்பும் குறைவு. அதற்கு நீங்கள் சில குறிப்புக்களை பின்பற்றவேண்டும். இவற்றை கடைபித்தால் சில வாரங்களிலே ஆரோக்கியமான பச்சை மிளகாய்கள் வளரத்துவங்கிவிடும். பச்சை மிளகாயை நன்முறையில் வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் நமது அன்றாட உணவில் பச்சை மிளகாய் தவறாமல் இடம்பிடிக்கும் காய்கறிகளுள் ஒன்றாகும். பருப்பு தாளிக்க பச்சை மிளகாய் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. இந்த பச்சை மிளகாய் காலை முதல் இரவு வரை அனைத்து உணவிலும் நமது வீடுகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. அதனால் உங்கள் சமையலறையில் அதிகம் உபயோபமாகும் ஒரு பொருளாக பச்சை மிளகாய் உள்ளது.
ஆனால், நீங்கள் அதை சந்தையில் இருந்து இனிமேல் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அதை உங்கள் வீட்டிலேயே வீட்டுத்தோட்டத்திலோ அல்லது மாடித்தோட்டத்திலோ அல்லது பால்கனி தோட்டத்திலோ கூட வளர்த்து பலன்பெறமுடியும். இதனால் உங்களுக்கு ஃபிரஷ் பச்சை மிளகாய்கள் கிடைக்கும். இதற்கு என்று நீங்கள் காசு செலவழிக்கவும் தேவையில்லை. பச்சை மிளகாள் எளிதாக வீட்டிலே பறித்துக்கொள்ளலாம். எனவே வீட்டிலே பச்சை மிளகாயை எப்படி வளர்ப்பது என்று பாருங்கள்.
விதைகள்
விதைகள் கடைகளில் எளிதில் கிடைத்துவிடும். இதற்காக தொட்டி வாங்கும்போது, துவாரங்களுடன் வாங்கிக்கொள்ளவேண்டும். 10 முதல் 12 இன்ச் ஆழமானதாக அந்த தொட்டி இருக்கவேண்டும். மண் நிரப்பி அதை இன்ச் உள்ளே விதைத்து மேலே மண் தூவவேண்டும். நன்றாக அழுத்திவிடவேண்டும். பச்சை மிளகாய் சிதைகள் நீளமாக வளர சில வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.
கிளைகளை வைத்து வளர்ப்பது
பச்சை மிளகாய் செடியின் கிளைகளை வெட்டி வைத்தும் பச்சை மிளகாயை வளர்க்கலாம். இலைகளுடன் உள்ள ஒரு கிளையை வெட்டிவிடவேண்டும். ஈரமான மண்ணில் புதைத்து வைத்துவிடவேண்டும். நேரடி சூரிய ஒளியில் வைத்தால் வேகமாக வளர்ந்துவிடும். இதில் சிறிய வேர்கள் தோன்ற சில வாரங்கள் ஆகும். ஒரு இன்ச் அளவுக்கு வளர்ந்தவுடன், வேறு தொட்டிக்கு மாற்றிவிடுங்கள்.
விரைவில் வளர்க்க குறிப்புகள்
தொட்டியில் விதைகளை விதைக்கும்போது, விதைகளுக்கு இடையில் போதிய இடைவெளிகள் உள்ளதான என்று பாருங்கள். அப்போதுதான் தாவரங்கள் முளைத்து வருவதற்கு இடம் கிடைக்கும்.
தினமும் 6 முதல் 8 மணி நேரங்கள் பச்சை மிளகாய்ச் செடியை நேரடி சூரிய வெளிச்சத்தின் கீழ் வைக்கவேண்டும்.
பச்சை மிளகாய், மண்ணில் ஈரம் இருந்தால் அது விரைவில் வளர்ந்துவிடும். அதிகம் தண்ணீர் ஊற்றினாலும் வேர் அழுகிவிடும். மண்ணின் மேல்புறம் காய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எனவே மண் காய்ந்தால் தண்ணீர் ஊற்றுங்கள். செடிக்கு தேவையானபோதும் தண்ணீர் விடுங்கள்.
நீங்கள் விதைகளை வாங்கும் இடத்தில் அவற்றின் தரம் மற்றும் எந்த சூழலில் வளரும் போன்றவற்றை கேட்டு வாங்குங்கள்.
பச்சை மிளகாய்ச் செடிகளில் பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பூச்சிகள் தென்பட்டால் உடனே பூச்சி மருந்துகளை அவற்றின் மீது தெளியுங்கள். பூச்சிகள் பச்சை மிளகாய்ச் செடிகளை அடிக்கடி தாக்கும்.
தாவரத்துக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவேண்டுமெனில், ஒவ்வொரு மாதமும் உரமிடுங்கள். அவை இயற்கை உரமாக இருந்தால் இன்னும் நல்லது.
அதிகம் பச்சை மிளகாய்கள் வளர்ந்துவிட்டால் கிளைகளை கொஞ்சம் வெட்டி நீக்குதல் நல்லது.
பச்சை மிளகாய்களை செடிகளில் இருந்து பறிக்கும்போது, மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கத்தி அல்லது ஏதேனும் கூறிய பொருளால், சரியான தண்டில் இருந்து வெட்டி எடுக்கவேண்டும்.
அறுவடையின்போது கட்டாயம் கையுறை அணியுங்கள். அதில் உள்ள எண்ணெய் உங்கள் கைகளில் எரிச்சலை ஏற்படுத்தும் எனவே கவனம் தேவை. பச்சை மிளகாய்ச் செடியை எப்போது, என்ன காரணத்துக்காக தொட்டாலும் உடனடியாக கழுவிவிடவேண்டும்.
டாபிக்ஸ்