Banana Walnut Pan Cake : வாழைப்பழம், வால்நட் சேர்த்து பேன் கேக்கள் செய்யலாமா? குழந்தைகளை குஷிப்படுத்தும் ரெசிபி இதோ!
Jun 24, 2023, 11:06 AM IST
Banana Walnut Pan Cake : வழக்கமான காலை உணவு போரடிக்கிறதா? குட்டீஸ்களுக்கு விருப்பமானதாகவும் இருக்க வேண்டுமா? என்ன செய்வது என்ற குழப்பம் உள்ளதா? கவலையே வேண்டாம். வாழைப்பழம், வால்நட்ஸ் வைத்து ஒரு பான்கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்த பேன் கேக்குடன் சிறிது பழங்கள், தேன் சேர்த்து உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். இதில் உள்ள வால்நட் உங்கள் பேன் கேக்குக்கு இனிப்பு, காரம் இரண்டு சுவையும் கொடுக்கும். வால்நட்டில் ஒமேகா 3 உள்ளதால் உடலுக்கு நல்லது. இதில் உள்ள ஆன்ட் ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உடலுக்கு வலுசேர்க்கிறது.
இதை காலை உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஸ்னாக்சாகவும் செய்து சாப்பிடலாம். எதற்காக தாமதிக்கிறார் கீழே உள்ள பொருட்களை எடுத்து கடகடவென்று பேன் கேக் செய்துவிட்டு வாங்க, சாப்பிடலாம்.
6 பேர் சாப்பிட தேவையான அளவு பொருட்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பெரிய மாம்பழம் - 1
ப்ளுபெரி - கால் கப்
சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை, பிரவுன் சுகர் எது வேண்டுமானாலும் உங்கள் சாய்ஸ்க்கு எடுத்துக்கொள்ளுங்கள்
தேவையான அளவு - 2 ஸ்பூன்
கொழுப்பு நிறைந்த பால் - ஒன்றரை கப்
நறுக்கிய வால்நட்கள் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
ஸ்ட்ராபெரி - கால் கப்
மைதா அல்லது கோதுமமை உங்கள் சாய்ஸ்
ஒன்றரை கப்
முட்டை - 1
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
மசித்த வாழைப்பழம் - அரைக்கப்
மேப்பிள் சிரப் தேவையான அளவு
முதல் மாம்பழம், ஸ்ட்ராபெரி, ப்ளுபெரி ஆகிய அனைத்து பழங்களையும் தோல் சீவி சிறிய துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அனைத்து பழங்களையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக காய்ந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஒருமுறை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில், வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் முட்டை, பால், நறுக்கி வால்நட்களை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாவை இதில் கொட்டி நன்றாக கலந்து விடவேண்டும். அந்தக்கலவை மிக கெட்டியானதாக இருந்தால் பால் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலக்கிக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் அல்லது நெய் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நன்றாக தடவி, மாவை சிறு சிறு தோசைகளாக ஊற்றி, இரு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து மாவிலிருந்தும் பேன்கேக்குகளை செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள பழங்களுடன் சிறிது தேன் அல்லது மேப்பிள் சிரப்பை அதன் மேல் ஊற்றி பரிமாறலாம்.
யம்மியான பேன்கேக்குகளை பார்த்தவுடன் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலம்டைவார்கள்.
டாபிக்ஸ்