தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Urad Dal Pachadi: எலும்புகளுக்கு வலு தரும் ராயலசீமா உளுந்து பச்சடி.. இப்படி ஒரு முறை செய்து பருங்க!

Urad Dal Pachadi: எலும்புகளுக்கு வலு தரும் ராயலசீமா உளுந்து பச்சடி.. இப்படி ஒரு முறை செய்து பருங்க!

Oct 12, 2023, 01:43 PM IST

google News
எலும்புகளுக்கு வலு தரும் ராயலசீமா உளுந்து பச்சடி எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க
எலும்புகளுக்கு வலு தரும் ராயலசீமா உளுந்து பச்சடி எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க

எலும்புகளுக்கு வலு தரும் ராயலசீமா உளுந்து பச்சடி எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க

எலும்புகளுக்கு வலு தரும் ராயலசீமா உளுந்து பச்சடி எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க

தேவையான பொருட்கள்

மல்லி விதை

மிளகு

சீரகம்

கருப்பு உளுந்து

வரமிளாய்

தக்காளி

பூண்டு

புளி

வெல்லம்

உப்பு

கடுகு

கறிவேப்பிலை

எண்ணெய்

செய்முறை

ஒரு சூடான வாணலியில் ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து சூடானதும் மல்லி விதை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் மேலும் ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கப் கறுப்பு உளுந்து சேர்த்து வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அதை ஒரு தட்டில் மாற்றி ஆற விட வேண்டும். அதே வாணலியில் 4 வரமிளகாயை வறுத்து அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலி யில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ஒரு தக்காளி மற்றும் 5 பல் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பொருட்கள் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த உளுந்து, மல்லி, சீரகம், மிளகு வரமிளகாயை, சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளி, உப்பு ஒரு ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து சேர்த்து பொரிய விட வேண்டும். அதில் இரண்டு கொத்து கறிவேப்பிலை மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலந்து விட்டு இறக்கி விடலாம்.

இந்த பச்சடி சூடான சாதம், தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு அட்டகாசமான காமினேஷன். இந்த பச்சடி நம் உடலுக்கும் அதிக ஆற்றலை தரும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். சுடு கஞ்சி சாதத்திற்கும் இந்த பச்சடி அட்டகாசமான காமினேஷன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை