தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Unemployment Report : இந்தியாவில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்! – அதிர்ச்சி அறிக்கை!

Unemployment Report : இந்தியாவில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்! – அதிர்ச்சி அறிக்கை!

Priyadarshini R HT Tamil

Mar 27, 2024, 02:42 PM IST

அரசு சமூகநீதியை ஏற்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை நலிந்த பிரிவினர் மத்தியில் நடைமுறைப்படுத்தினாலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மத்தியில், பாதுகாப்புள்ள வேலை கிடைப்பது பகற்கனவாகவே உள்ளது.
அரசு சமூகநீதியை ஏற்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை நலிந்த பிரிவினர் மத்தியில் நடைமுறைப்படுத்தினாலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மத்தியில், பாதுகாப்புள்ள வேலை கிடைப்பது பகற்கனவாகவே உள்ளது.

அரசு சமூகநீதியை ஏற்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை நலிந்த பிரிவினர் மத்தியில் நடைமுறைப்படுத்தினாலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மத்தியில், பாதுகாப்புள்ள வேலை கிடைப்பது பகற்கனவாகவே உள்ளது.

International Labour Organization and The Institute of Human Development - இந்தியா, இணைந்து வெளியிட்ட இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையில், நன்றாக படித்த இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 2000ம் ஆண்டில் 35.2 சதவீதம் என இருந்தது, 2022ல் 65.7 சதவீதம் என ஏறக்குறைய 2 மடங்காக அதிகரித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Covaxin: ‘கோவாக்சின் தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு..’-ஆய்வில் வெளியான பகீர் தகவல்

ICMR: ஒரு முறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தலாமா.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்

Bad Food Combinations: கவனம் மக்களே.. ஆயுர்வேதத்தின் படி பிரச்சனைகக்குரிய சாப்பிடக்கூடாத உணவு சேர்க்கைகள் இதோ!

Periods: மாதவிடாய் வலியா.. உரிய தேதிக்கு முன்பே மாதவிடாய் வர வேண்டுமா.. எளிய வீட்டு வைத்தியம் இதோ!

இளம் தலைமுறையினர் மத்தியில் (Youngsters) வேலைவாய்ப்பின்மை என்பது 83 சதவீதமாக உள்ளது என்பது மிகவும் கவலையான செய்தியாகும். இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை 2000-2019 இடைப்பட்ட காலத்தில் அதிகரித்தாலும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை சற்று குறைந்தது.

இருப்பினும், அந்த காலத்தில் படித்த இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக காணப்பட்டது.

Labour Force Participation Rate,

Worker Population Ratio,

Unemployment Rate (வேலைவாய்ப்பின்மை விகிதம்) 2000-2018 இடைப்பட்ட காலத்தில் மோசமான பாதிப்பை சந்தித்தாலும், 2019ம்ஆண்டில் அது சற்று முன்னேற்றம் கண்டது.

பொருளாதார நெருக்கடியின்போது, வேலைவாய்ப்பின்மை சற்று குறைந்தாலும், எவ்வித வேலைவாய்ப்புகள் உருவாயின என்பது குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. (சுயவேலைவாய்ப்பு அதிகமானதை நல்ல வளர்ச்சி என கருத முடியுமா? குடும்பத்தை சிரமமின்றி நடத்த போதிய வருமானம் அதில் கிடைத்ததா?)

விவசாயம், தவிர்த்த பிற துறைகளில் வேலைவாய்ப்பின் வளர்ச்சி போதுமானதாக இல்லை என்பதும், வேளாண்துறை வேலையைவிட்டு வருபவர்களுக்கு மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதும் போதுமானதாக இல்லை என்பதும் தீர்வு காணப்பட வேண்டிய விஷயங்கள்.

2018க்குமுன், வேலைவாய்ப்பு வேளாண்துறை தவிர்த்த பிற துறைகளில், வேளாண்துறையைக் காட்டிலும், அதிக வளர்ச்சியை கண்டது.

வேளாண்துறையில் இருந்து, வெளிவந்தவர்களுக்கு கட்டுமானத் துறையும், சேவைத்துறையும் தான் வேலை அளித்தன. 90 சதவீதம் பணியாட்கள் அமைப்பு சாராத் தொழில்களில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர்.

நிரந்தர வேலையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 2000ம் ஆண்டிக்குப்பின் அதிகரித்தாலும், 2018ம் ஆண்டிற்குப் பின் அது குறையத் தொடங்கியது.

வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வேலைகள் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்சனைகள் நிகழ்ந்து வரும் சூழலில், ஒரு சிறுபிரிவினருக்கு மட்டுமே, வேளாண், தவிர்த்த துறைகளில், அமைப்புசார்ந்த தொழிலில் வேலைவாய்ப்பு கிடைத்து. அவர்களின் சமூக பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டது.

வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களிலும், ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே நீண்டகால பணிநிரந்தரம் உறுதிபடுத்தப்பட்டது.

பெரும்பாலானோருக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரமற்ற பணிகள் மட்டுமே குறுகிய காலத்திற்கு கிடைத்து. அவர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குள்ளான நிலையிலேயே இருந்து வருகிறது.

இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க, அவர்களுக்கு தேவையான திறமைகள் இல்லாமல் இருந்ததும் ஒரு முக்கிய காரணம். சந்தையில் தேவைப்படும் திறமைகள் இளைஞர்கள் மத்தியில் இல்லை.

75 சதவீத இளைஞர்களுக்கு, இணைப்புடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்புவது, 60 சதவீத இளைஞர்கள் மின்னஞ்சலில் நகலெடுத்து ஒட்டவைப்பது, 90 சதவீத இளைஞர்கள் கணித விதிகளை (Formula) காகிதத்தில் எழுதுவது குறித்த நடைமுறை அறிவை தெரிந்திருக்கவில்லை. திறமை சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப இல்லை.

மெத்தப் படித்தவர்கள், குறைந்த வருமானம் உள்ள, பாதுகாப்பற்ற வேலைகளை ஏற்க முன்வராமல், அவற்றை அளிக்கும் வேலைக்காக காத்திருந்ததால், படித்தவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகம் காணப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை, வேலை மற்றும் ஊதியத்தில் ஆண்/பெண் சமத்துவமின்மை அதிகம் காணப்படுவதோடு, பெண்கள் வேலையில் குறைவாக ஈடுபடும் போக்கே பரவலாக உள்ளது.

வளர்ச்சி என்பது சமச்சீராக இல்லை.

2022-23ல், இந்தியாவில் மேல்மட்டத்தில் உள்ள முதல் 10 சதவீதத்தில் 1 சதவீதம் பேரின் வருமானப்பகிர்வு முறையே 60 சதவீதம், 22.6 சதவீதம் என மிக அதிகமாக இருப்பதிலிருந்து, வெள்ளையர் ஆட்சிக் காலத்தைவிட தற்போதைய சமச்சீரற்ற வளர்ச்சி கணிசமாக அதிகரித்துள்ளது என்பது புள்ளிவிவரமாக உள்ளது.

அரசு சமூகநீதியை ஏற்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை நலிந்த பிரிவினர் மத்தியில் நடைமுறைப்படுத்தினாலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மத்தியில், பாதுகாப்புள்ள வேலை கிடைப்பது பகற்கனவாகவே உள்ளது.

அவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில், பணிநிரந்தரமற்ற ஒப்பந்த வேலைகளில் மட்டுமே அதிகமிருப்பது. அமைப்புசாரா தொழிலாளர்களாக மட்டுமே அதிகமிருப்பது சமூகநீதியை கேலிக்கூத்தாக்குகிறது.

முன்பைக் காட்டிலும் கல்வியறிவு அனைத்து தரப்பினரிலும் அதிகரித்து இருந்தாலும், (பணக்காரர்கள் மத்தியில் அதிகம்; ஏழைகள் மத்தியில் குறைவு.) சாதிய - சமூக படிநிலை அமைப்பு இன்னமும் நம்நாட்டில் தொடரத்தான் செய்கிறது.

எனவே, வேலைவாய்ப்பை குறிப்பாக அடித்தட்டு மக்களிடம் உருவாக்காத வளர்ச்சி, வருமானத்தில் அதிக ஏற்றத்தாழ்வுகளை (Inequality) கொண்ட சமூக. சமச்சீரற்ற வளர்ச்சி, ஏறக்குறைய 90 சதவீத மக்கள் வேலை பாதுகாப்பின்றி, அமைப்புசாரா தொழில்களில் மட்டும் குறைந்த கூலிக்கு வேலை செய்து வரும் சூழல் மாறாத நிலையில், உண்மையான வளர்ச்சி ஒரு சமுதாயத்திற்கு கிடைத்துள்ளதாக நினைத்துக் கொள்வது முற்றிலும் தவறு.

வளர்ச்சி என்பது அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியாக (குறிப்பாக அடித்தட்டு/சாதியத்தில் கடைகோடியில் இருப்பவர்களின் வளர்ச்சியை உறுதிசெய்தால் மட்டுமே) இருக்கும்போது மட்டுமே உண்மையான வளர்ச்சியை சமூகம் எட்டியுள்ளது எனக் கருதமுடியும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி