தமிழ் செய்திகள்  /  Cricket  /  Hardik Pandya And Shubman Gill To Take Captain Role On Their Respective Teams Mumbai Indians, Gujarat Titans

GT vs MI Preview: கேப்டனாக முதல் பரிட்சை! பாண்ட்யாவின் அனுபவ மும்பை படையை சமாளிக்குமா கில்லின் இளம் படை?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 24, 2024 08:00 AM IST

பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும் பவுலிங் சற்று வலிமை குறைவாகவே இருக்கிறது மும்பை இந்தியனஸ். குஜராத் அணியை பொறுத்தவரை இளமையும், அனுபவமும் கொண்ட வீரர்களால் சரியான சமநிலை கொண்ட அணியாக உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் (இடது), மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (வலது)
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் (இடது), மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (வலது)

ட்ரெண்டிங் செய்திகள்

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் கடந்த சீசனில் ப்ளேஆஃப் வரை தகுதி பெற்றது.

கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது ஐபிஎல் கேரியரை மும்பை இந்தியன்ஸ் அணியல் தான் தொடங்கினார். அந்த அணியில் விளையாடியபோது நான்கு கோப்பைகளை வென்றிருந்த நிலையில், 2022 சீசனில் மெகா ஏலத்தில் குஜராத் அணியினரால் வங்கப்பட்டு அந்த அணி கேப்டன் ஆனார். பின்னர் முதல் சீசனிலேயே குஜராத்தை சாம்பியன் ஆக்கிய அவர், இரண்டாவது சீசனில் பைனல் வரை அழைத்து சென்றார்.

தற்போது மும்பை அணியை மிகப் பெரிய விலை கொடுத்து டிரேடிங் செய்யப்பட்டு குஜராத் அணியில் இருந்து, தாய் வீடான மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் வந்துள்ளார். அத்துடன் இந்த முறை கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார். கடந்த 10 சீசன்களாக மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மா சாதரண வீரராக களமிறங்குகிறார்

முதல் முறையாக கேப்டன் பொறுப்பில் கில்

ஹர்திக் பாண்ட்யா இல்லாத நிலையில் குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து வரும் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார்.

கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார் சுப்மன் கில். இதையடுத்து இந்த முறை டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக மட்டுமில்லால் குஜராத் அணியை வழிநடத்தவும் உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் பலம்

பேட்டிங்கில் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா என பலமாக இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஆனால் பவுலிங்கை பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா, பியூஷ் சாவ்லா தவிர மற்றவர்கள் போதிய அனுபவம் இல்லாதது சற்று பலவீனமான விஷயமாகவே உள்ளது.

அத்துடன் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமாகாத நிலையில் அவர் விளையாடாமல் இருப்பது பின்னடைவான விஷயமாகவே உள்ளது

குஜராத் டைட்டன்ஸ் பலம்

பேட்டிங்குக்கு சுப்மன் கில், விருத்திமான சஹா, சாய் சுதர்சன், கேன் வில்லியம்சன், டேவிட் மில்லர், ஷாருக்கான், ராகுல் டெவாடியா என அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் கலவையாக உள்ளது. பவுலிங்கில் ரஷித் கான், சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா என டி20 ஸ்பெஷிலிஸ்ட்கள் இருப்பதால் சரியான சமநிலை கொண்ட அணியாகவே உள்ளது

பிட்ச் நிலவரம்

ஸ்பின்னர்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு உதவும் விதமாக ஆடுகளம் செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது. பனிப்பொலிவு பிரச்னை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்து நன்கு எழும்பி வரும் விதமாக இருக்கும் பேட்டர்களுக்கு ஜொலிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை மோதிக்கொண்ட 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point