தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Youths Attack Hotel Owner With Knife In Sivakasi

Sivakasi: ‘சாப்பாடு பார்சல் தர லேட்’ கத்தியை காட்டி மிரட்டி ரகளை செய்த இளைஞர்கள் - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

Mar 11, 2024 11:07 AM IST Karthikeyan S
Mar 11, 2024 11:07 AM IST
  • சிவகாசி அருகே மாரனேரியில் உணவகம் நடத்தி வருபவர் ஜெகநாதன். அவரது மகன்கள் வாசுதேவன், கரிமால், ராஜேஷ் கண்ணன் ஆகிய மூவரும் கடையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு இவர்களது உணவு விடுதிக்கு அருகில் உள்ள ஏ. துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருவர் உணவு பார்சல் வாங்க வந்துள்ளனர். கடையில் கூட்டமாக இருந்த நிலையில், உணவு பார்சல் வழங்க காலதாமதமானது. இதனால் கடை உரிமையாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தகராறில், பேவர் பிளாக் கல்லாலும், கத்தியாலும் தாக்கியதில் வாசுதேவன் காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி சண்டையை விலக்க முயன்ற போது அவர்களையும் கத்தியால் கொடூரமாக தாக்கினர். இந்த காட்சிகள் உணவு விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் சம்பவம் குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து உணவகத்தில் தகராறு செய்துவிட்டு, ஓட்டல் உரிமையாளரை கத்தியால் தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பிய இருவரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More