Relationship: உறவு கொள்ளாத கோபத்தால் தாய்மாமனை அடித்துக் கொன்ற அக்கா தங்கையர்!
Jun 15, 2023, 05:00 AM IST
இல்லற தாம்பத்தியத்தின் சூட்சுமங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
உறவு கொள்ளவில்லை என்ற கோபத்தில் தாலிகட்டிய தாய்மாமனை அடித்துக் கொன்ற அக்கா தங்கையரின் வன்முறைக்கு காரணமான பதிவு இது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்தவர் சந்தனபாண்டி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது அக்கா வீராயிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு மகள்கள். இருவரும் டீச்சர் டிரெய்னிங் முடித்து பள்ளியில் ஆசிரியைகளாக வேலைப்பார்த்து வந்தனர். இருவரும் பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருப்பார்கள். புதுநிறம் என்றாலும் எடுப்பான பூரிப்பான உடல்வாகு.
சந்தனபாண்டி பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். கோடிக்கணக்கில் பணப்புழக்கம். உசிலம்பட்டியில் இருந்து சென்னைக்கு 4 ஆம்னி பஸ்களை இயக்கிவந்தார். அக்கா வீராயிக்கு திருமணமானதும் அவருக்கான சொத்து பங்கை சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. சந்தனப்பாண்டிக்கும் ஏராளமான சொத்து.
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்துவிட்டதால் அக்கா வீராயி வீட்டில்தான் வளர்ந்துவந்தார் சந்தனப்பாண்டி. பின்னர் ஆளாகி தொழில் செய்து வந்தபோது தன்போக்கில் செலவழித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். திருமண வயது தாண்டியும் அதைப்பற்றி கவலைப்படாத சந்தனபாண்டியை கண்டித்து தனது இருமகள்களையும் கல்யாணம் கட்டிக் கொள்ளுமாறு வீராயி வற்புறுத்தியுள்ளார்.
முதலில் இதைக் கேட்ட சந்தனப்பாண்டி அதிர்ச்சியடைந்துவிட்டார். பிள்ளையோடு பிள்ளையாக வளர்ந்த பெண்களை திருமணம் செய்வதா முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் சந்தனபாண்டியின் சொத்துகள் வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என்பதில் வீராயி குறிப்பாக இருந்தார். திரும்பத்திரும்பப் பேசி சில உறவினர்கள் மூலமாகவும் அழுத்தம் கொடுத்து பார்த்தார். மனம் ஒப்பாமல் கல்யாணத்துக்கு சம்மதித்தார் சந்தனப்பாண்டி.
ஏகதடபுடலாக கல்யாணம். தரைதளத்தில் கல்யாண ஏற்பாடுகள். கீழ்தளத்தில் சரக்கு சமாசாரங்களுடன் ஆரவாரமான விருந்து. வந்தவர்களில் பாதிபேர் நேராக கீழ்தளத்துக்கு சென்று வயிறுநிரம்ப குடித்துவிட்டுதான் கல்யாணத்துக்கே வந்தனர்.
இப்படியாக கல்யாணம் நடந்து முடிந்தது. அன்று முதலிரவு. வெவ்வேறு அறைகளில் மணப்பெண்களை இருக்க வைக்குமாறு சந்தனப்பாண்டி சொன்னதை வீராயி கேட்கவில்லை. 'எங்களுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல மாமா!' என்று கேலியாகக் கண்ணடித்துக் கூறிவிட்டு மணப்பெண்கள் அறைக்குப் போய்விட்டனர். மிகுந்த சங்கடத்துடன் முதலிரவு அறைக்குள் நுழைந்த சந்தனப்பாண்டி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். இரு பெண்களும் பிறந்தமேனியாக இருந்துள்ளனர். உடனடியாக அறையை விட்டு வெளியே வந்த அவரை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர் உறவினர்கள்.
அப்படியிப்படியென்று எல்லாம் நடந்து முடிந்தது.
அவ்வளவுதான் அடுத்தநாள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ போய்விட்டார் சந்தனபாண்டி. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்துதான் அவர் சென்னையில் வீடுபார்த்து தங்கியிருந்தது வீராயிக்குத் தெரிய வந்தது. அக்காவும் மகள்களும் உடனே அங்கு சென்று சந்தனப்பாண்டியிடம் சண்டையிட்டுள்ளனர். அக்கம்பக்கத்தார் வேடிக்கை பார்த்ததால் சங்கடப்பட்ட சந்தனப்பாண்டி அவர்களுடன் உசிலம்பட்டிக்குத் திரும்பிவந்தார்.
ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் மனைவிகளுடன் அவர் உறவு வைத்துக் கொள்ளவில்லை. அடிக்கடி இதனால் குடும்பத்தில் சண்டை வந்தது. தினமும் சந்தனப்பாண்டி தாறுமாறாகக் குடிக்கத் தொடங்கினார். ஒருநாள் இரவு திடீரென அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. எல்லாரும் ஓடிப்போய் பார்த்தபோது தலையில் ரத்தம் வழிய மயங்கிக் கிடந்தார் சந்தனப்பாண்டி. அருகில் அவரது இரு மனைவிகளும் கைகளில் உலக்கையை வைத்திருந்தனர். தங்களுடன் உறவு கொள்ளாத கோபத்தால் அவரை அடித்துக் கொன்றதாக கூறினர்.
தகவல் அறிந்த போலீஸார் அங்கு வந்து இருவரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து உளவியல் நிபுணர்களிடம் கேட்டபோது, பொதுவாகவே தென் மாவட்ட மக்களிடம் ஏகப்பட்ட சென்டிமென்ட் இருக்கும். சிறுவயதில் இருந்தே அக்கா வீட்டில் ஒரு மகன் போலவே வளர்ந்தவரால் அக்கா மகள்களை மனைவியாக சந்தனப்பாண்டியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் அது முறையும் ஆகாது.
தாய்மாமன் என்பவர் மற்றொரு தந்தைபோல. ஆனால் சொத்துக்கு ஆசைப்பட்ட அக்கா செய்த விபரீத முடிவால் சந்தனப்பாண்டியின் வாழ்க்கைதான் நாசமானது.
உறவுகளுக்கு மதிப்பு கொடுத்தவரின் உயிர் அநியாயமாகப் பறிபோனதுதான் மிச்சம். சமூகத்தில் இருக்கும் நடைமுறைக்கு ஏற்ப சந்தனப்பாண்டியின் கருத்துக்கு வீராயி மதிப்பளித்திருந்தால் இந்த சோகம் நடந்திருக்காது என்றனர்.
உறவுகளுக்கு மதிப்பில்லையென்றால் அது தகாத காரியமாகிவிடும். இதுபோன்ற செயல்கள் குடும்பத்துக்கு ஆகாது என்றும் உளவியல் நிபுணர்கள் கூறினர்.
டாபிக்ஸ்