Ultra-processed food: 32 வகையான நோய் ஆபத்துக்களை கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்! ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
Mar 01, 2024, 05:38 PM IST
தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ஆயுளையும் குறைக்கிறது என ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதுபோன்ற உணவுகளுக்கு எதிராக பொது கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீவிர பதப்படுத்தல் உணவுகள் பல்வேறு துறைகளின் செயல்முறைகள் இடம்பிடித்துள்ளன. உணவுகளில் வண்ணங்கள், சுவையூட்டிகள் மற்றும் இதர சேர்க்கைகள் என்பது பொதுவாக நிகழ்வதாகவே உள்ளது. குறிப்பாக பேக்கிங் செய்யப்பட்ட பேக் உணவுகள், ஸ்நாக்ஸ், கார்ப்பனேடட் பானங்கள், சர்க்கரை மிகுந்த தானியங்கள், சாப்பிட தயாராக அல்லது சூடாக்கி சாப்பிடக்கூடிய உணவுகள் இந்த வகை உணவுகளுக்கு உதரணங்களாக இருக்கின்றன. இவ்வகை உணவுகளில் மோசமான வைட்டமின், நார்ச்சத்துகள் அல்லது அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு, உப்பு போன்றவை இடம்பெறலாம்.
இந்த உணவுகளால் சுமார் 32க்கும் மேற்பட்ட ஆபத்தை விளைவிக்கும் நோய் பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தை சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்வது இருதய நோய் தொடர்பான இறப்புக்கான ஆபத்து 50 சதவீதம் வரை இருப்பதாக உறுதியான ஆதாரங்களை கண்டறிந்துள்ளது. இதில் 48 முதல் 53 சதவீதம் வரை கவலை மற்றும் பொதுவான மனநல கோளாறுகள், மற்றும் 12 சதவீதம் டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல மருத்துவ இதழான பிஎம்ஜேவில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஆய்வின்படி, தீவிர பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது 21 சதவீதம் எதாவது காரணத்தால் இறப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதய நோய் தொடர்பான இறப்பு, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு பிரச்னைகள் 40 முதல் 66 சதவீதம் வரை இருப்பதாகவும், தூக்க தொடர்பான பிரச்னைகள்,மனச்சோர்வு அபாயம் 22 சதவீதம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் பொது சுகாதார நடவடிக்கைகளை ஆதரிப்பதோடு, மேம்பட்ட மக்கள் ஆரோக்கியத்துக்காக தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வை குறைக்க முயல்கிறது.
பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் அருகில் இதன் விளம்பரங்களை கட்டுப்படுத்துதல், விற்பனையை தடை செய்தல், பதப்படுத்தப்படாத அல்லது குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளை அணுகக்கூடிய வகையில் செய்தல் போன்றவற்றால் பாதிப்புகளை கட்டுப்படுத்தி பொதுமக்களின் ஆரோக்கிய நலனை பேனி காக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்