தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ugadi 2023: படைப்பை பிரம்மதேவன் தொடங்கிய உகாதி திருநாளின் சிறப்புகளை அறிவோம்

Ugadi 2023: படைப்பை பிரம்மதேவன் தொடங்கிய உகாதி திருநாளின் சிறப்புகளை அறிவோம்

I Jayachandran HT Tamil

Mar 22, 2023, 05:52 AM IST

google News
பூவுலகில் பிரம்மதேவன் படைப்பைத் தொடங்கிய நாளான உகாதியின் சிறப்புகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
பூவுலகில் பிரம்மதேவன் படைப்பைத் தொடங்கிய நாளான உகாதியின் சிறப்புகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

பூவுலகில் பிரம்மதேவன் படைப்பைத் தொடங்கிய நாளான உகாதியின் சிறப்புகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

இந்து சாஸ்திரங்களின்படி பிரம்மதேவன் தன்னுடைய படைப்புத்தொழிலை தொடங்கிய நாளை தான் உகாதி பண்டிகையாக கொண்டாடுகிறோம். இத்தகைய சிறப்புமிக்க நாளில் செய்யும் சுபகாரியங்களுக்கு நாள், நட்சத்திரம் கூட பார்க்க தேவையில்லை. அதுமட்டுமல்லாமல், கலியுகம் தொடங்கிய நாளாகவும் இந்த நாள்தான் சொல்லப்படுகிறது.

உகாதி பண்டிகை பங்குனி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உகாதிப் பண்டிகையானது மார்ச் 22ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அதிகாலை 12.01 மணியுடன் அமாவாசை திதி முடிந்து விடுகிறது. இரவு 10.24 வரை பிரதமை திதியும் அதன் பிறகு துவிதியை திதியும் உள்ளது.

நாள் முழுவதும் பிரதமை திதி உள்ளதால் மார்ச் 22ஆம் தேதி உகாதி தினமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ், மலையாள மாதங்கள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. அதுபோல் தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. தெலுங்கு வருடப் பிறப்பை உகாதி அல்லது யுகாதி என்று அழைக்கின்றனர்.

இந்த உகாதி தினத்தில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கொண்டாடுகின்றனர்.

உகாதி சிறப்பாக உகாதி பச்சடியுடன் அறுசுவை விருந்து சமைத்து பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் எல்லாம் சேர்த்து சமைப்பதே உகாதி பச்சடியாகும்.

தமிழ்ப் புத்தாண்டைப் போலவே உகாதி புத்தாண்டிலும் பஞ்சாங்கம் படிக்கும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

இந்தப் பண்டிகை நாளில் வீட்டுக்கு வீடு அழகிய வண்ணக் கோலங்களும், மாவிலைத் தோரணங்களும் களைகட்டும்.

பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளான உகாதியில் இன்னல்கள் நீங்கி மக்கள் வாழ்க்கையில் இன்பம் சேர்க்கட்டும்.

உகாதி நாளில் தெலுங்கு, கன்னட பாரம்பரிய உணவுகளை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்!

உகாதி பச்சடி: உகாதி பச்சடி உகாதி பண்டிகையன்று சாப்பிட வேண்டும். இனிப்பு, புளிப்பு, காரமான, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு வகையான சுவை கொண்டது. ஒவ்வொரு சுவையும் ஒரு நபர் வாழ்க்கையில் அனுபவிக்கும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் குறிக்கிறது.

பொப்பாட்டு, பொலேலு, ஹோலிகே, உப்பட்டு அல்லது போளி: பொப்பாட்டு என்பது வெல்லம், தேங்காய் அல்லது உளுந்து மாவு நிரப்பப்பட்ட பரோட்டா போன்ற உணவு. இது உகாதி பண்டிகையின் போது ஒரு பிரபலமான உணவாகும். பெரும்பாலும் நெய் அல்லது பாலுடன் பரிமாறப்படுகிறது. நம்ம ஊர் போளிதான் இது!

புளிஹோரா: இந்துக்கள் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை, மங்கள நிகழ்ச்சிகளுக்கும் புளி கூழ் செய்து சாதத்தில் கலந்து புளிஹோரா சாப்பிடுவார்கள். நம்ம ஊரில் இது புளியோதரை.

ஒப்பாட்டு சாரு: இது சமையலில் எஞ்சியிருக்கும் பூரணத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் காரமான சூப். இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

மாம்பழ பச்சடி: மாம்பழ பச்சடி என்பது பழுத்த மாம்பழம், வெல்லம் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு கெட்டியான சட்னி. இது மாம்பழ சீசனில் ஒரு பிரபலமான உணவாகும், இது சாதத்துடன் ஒரு பக்க உணவாக பரிமாறப்படுகிறது.

பிசி பேளே பாத்: பிசி பேளே பாத் என்பது காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு காரமான சாத வகையாகும். பிசி என்றால் கன்னடத்தில் சூடான என்று அர்த்தம். இது கர்நாடகாவில் பிரபலமான உணவு. வடகம், காரா பூந்தி கலந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி