தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beauty Tips: எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒல்லியா தெரியணுமா? இதோ டிப்ஸ்!

Beauty Tips: எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒல்லியா தெரியணுமா? இதோ டிப்ஸ்!

I Jayachandran HT Tamil

Jun 04, 2023, 06:45 PM IST

google News
எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒல்லியா தெரிய என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒல்லியா தெரிய என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒல்லியா தெரிய என்ன செய்யவேண்டும் என்பது பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் எல்லாருக்குமே தாங்கள் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமென்றும் கட்டழகுடன் காணப்பட வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆடைகளில் சற்று கவனம் செலுத்தினால் போதும் எந்த டிரஸ் போட்டாலும் அதில் அவர்கள் ஸ்லிம்மாகத் தெரிவார்கள்.

ஜப்பி என அழைக்கப்படும் சற்று உடல் பருமன் கொண்ட பெண்கள் தங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்வதில் எப்போதுமே குழப்பம் கொள்கிறார்கள். அதே போல் கடைகளில் சென்று ஆடைகளை வாங்குவதிலும் அவர்களுக்கு கூச்சம். ஆனால் தற்போது குண்டு, ஒல்லி, கறுப்பு, சிவப்பு என்ற வெளி தோற்றத்தை வைத்து பெண்களை பிரிப்பதே தவறு என்ற பார்வை சமூகத்தில் வந்து விட்டது. ஆனாலும் சில குண்டான பெண்களுக்கு புடவை கட்டினாலும், ஜீன்ஸ் போட்டாலும் சற்று ஒல்லியாக தெரிய வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்கிறது.

குண்டான பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்தால் ஒல்லியாக தெரியலாம் என்பதை விவரிக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சிந்து.

சின்னத்திரை மற்றும் கோலிவுட்டில் மிகவும் பிரபலமான பெண் ஆடை வடிவமைப்பாளராக வலம் வரும் சிந்து, குண்டான பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்தால் ஒல்லியாக தெரியலாம் என்பதை விவரிக்கிறார்.

உடல் அமைப்பு-

முதலில் உங்கள் உடல் அமைப்பை பற்றி நீங்கள் முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கையில் சதை அதிகம் இருக்கிறதா? தோள்பட்டை அகலமாக இருக்கிறதா அல்லது தொடை பகுதியில் உடல் பருமன் அதிகம் தெரிகிறதா? என முதலில் உங்கள் உடல் தோற்றத்தை சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

நீளமான குர்தா-

குண்டான பெண்கள் நீளமான குர்தா அணிந்தால் இன்னும் குண்டாக தெரிவோம் என நினைப்பார்கள். அது தவறு. பலாசோ பேண்ட் அணிந்து அதன் மேலே ஷேர்ட் போல் இருக்கும் நீளமான குர்தாவை இவர்கள் அணியலாம். இன்னும் அழகாக காட்ட இடுப்பில் பெல்ட் அணியலாம். இப்படி அணிவதால் குண்டான பெண்கள் ஒல்லியாக தெரிவது மட்டுமல்லாமல் அழகாகவும் தெரிவார்கள். பெல் ஸ்லீவ் டாப் கையில் இருக்கும் சதையை மறைத்து ஒல்லியான தோற்றத்தை தருகிறது. எனவே பலாசோவுடன் பெல் ஸ்லீவ் டாப்களும் நல்ல தேர்வு.

கலர் தேர்வு-

எப்போதுமே கலர் தேர்வில் கவனமாய் இருங்கள். டாப் மற்றும் பாட்டம் இரண்டிலும் மேட்ச் செய்யும் கலர்களை தேர்வு செய்யாதீர்கள். அதாவது பாட்டம் டார்க் க்ரீன் என்றால் அதற்கு மேட்ச் கொடுக்க மேல் டாப்பை லைட் க்ரீனில் தேர்வு செய்யாதீர்கள். ஒரே ஃபேமலி நிறத்தை கீழே மேலே என மேட்ச் செய்து அணியாதீர்கள். கீழே பேண்ட் அல்லது ஸ்கர்ட்டுக்கு டார்க் கலரை அணிந்தால் அதற்கு மேலே போடும் டாப் லைட் நிறத்தில் எதிர் நிறத்தில் இருக்க வேண்டும். இப்படி அணிவது உடலை ஒல்லியாக காட்டும்.

டிசைன்கள்-

பெரிய பெரிய கோடுகள், கட்டங்கள் பிரிண்ட் போட்ட ஆடைகளை தேர்வு செய்யக்கூடாது பெரிய பெரிய பூக்கள், பெரிய வட்டம், பெரிய புள்ளிகள் இருக்கும் ஆடைகள் உங்களை இன்னும் குண்டாக காட்டும்.

சரியான ஆடைகள்-

குண்டான பெண்கள் ஒல்லியாக தெரிய முட்டிக்கு மேலே வரும் ஃபிராக் போன்ற ட்ரெஸ்களை அணிந்து அதற்கு மேல் ஓவர் கோட் அணியலாம். இப்போது ட்ரெண்டிங்லில் இருக்கும் முழு நீள ஓவர் கோட் குண்டான பெண்கள் ஜீன்ஸ் போடும் போது அவர்களை ஒல்லியாக காட்டுகிறது. அதை தேர்வு செய்யும் போது முட்டி வரைக்கும் வரும் கோட்டாக இருந்தால் நல்லது.

லாங் அனார்கலி-

திருமணம், பார்ட்டி, ஃபேமலி விழாக்களில் பெண்கள் அனார்கலி அணிவதை மிகவும் விரும்புகிறார்கள். இது ஒருவிதமான ராயல் லுக்கை தரக்கூடியது. குண்டான பெண்கள் அனார்கலியை தேர்வு செய்தால் கண்டிப்பாக அது காட்டனாக இருக்க கூடாது. அதே போல் லூசாகவும் அணிய கூடாது,. அனார்கலி கண்டிப்பாக ஃபிட்டாக இருக்க வேண்டும். ஜார்ஜ், வெல்வட், ஷிபான் போன்ற மெட்டீரியலை தான் தேர்வு செய்ய வேண்டும். குட்டை கையை தவிர்த்து முழுங்கை அல்லது எல்போ கைகளை தேர்வு செய்தால் இன்னும் ஒல்லியாக தெரிவீர்கள்.

பெப்லம் டாப்-

குண்டான பெண்கள் பெப்லம் டாப்பை அணிவதாக இருந்தால் ஃபிலீட்ஸ் வைத்த பெப்லம் டாப்பை தேர்வு செய்ய கூடாது. அது வயிற்று பகுதியை இன்னும் குண்டாக காட்டும்.

லேகங்கா-

விஷேசங்கள், திருமண நிகழ்வுகளுக்கு லேகங்காவை தேர்வு செய்யும் போது வயிறு வெளியில் தெரியும் என குண்டான பெண்கள் கவலைப்படுவது உண்டு. அதை மறைக்க லாங் ஸ்டப் அணிந்து கொள்ளலாம். அப்படி அணியும் போது உங்கள் முழு உடலும் மறைந்துவிடும்.

மனநிலை-

குண்டாக இருப்பதால் எந்த ஆடையும் மேட்ச் ஆகாது என்ற எண்ணத்தை முதலில் விரட்டுங்கள். தைரியமாக முழு நம்பிக்கையுடன் உங்களுக்கான ஆடைகளை தேர்வு செய்து அணியுங்கள். எல்லா ஆடையும் உங்களுக்கு அழகாக இருக்கிறது என்ற மனநிலை உங்களுக்கு வந்துவிடும், கண்ணாடியில் பார்க்கும் போது உங்களை நீங்களே லைக் செய்வீர்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி