தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tour Spots In India : இந்தியாவில் எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்? இந்த விடுமுறையை கொண்டாட திட்டமிடுங்கள்!

Tour Spots in India : இந்தியாவில் எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்? இந்த விடுமுறையை கொண்டாட திட்டமிடுங்கள்!

Priyadarshini R HT Tamil

Sep 10, 2024, 02:20 PM IST

google News
Tourism in India : இந்தியாவில் எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்? இந்த விடுமுறையை கொண்டாட திட்டமிடுங்கள். அதற்கு உதவக்கூடிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Tourism in India : இந்தியாவில் எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்? இந்த விடுமுறையை கொண்டாட திட்டமிடுங்கள். அதற்கு உதவக்கூடிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Tourism in India : இந்தியாவில் எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்? இந்த விடுமுறையை கொண்டாட திட்டமிடுங்கள். அதற்கு உதவக்கூடிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

விடுமுறை என்றால், சொந்த ஊர், ஊர் திருவிழா, சுற்றுலா, சினிமா இதுதான். தமிழ்நாட்டில் சுற்றிப்பார்த்துவிட்டு போர் அடிக்கிறது என்றால், இந்தியா முழுக்க சுற்றலாம். விடுமுறையைக் கொண்டாட இந்தியாவில் எங்கெல்லாம் சுற்றலாம். அதற்கு உங்களுக்கு இங்கு சிறிய வழிகாட்டும் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்வது சிலருக்கும் மிகவும் பிடிக்கும். சுற்றுலா உங்களுக்கு எண்ணற்ற அனுபவங்ளைத்தரும். மகிழ்ச்சியை மட்டுமல்ல சிலி படிப்பினைகளையும் தரும். நீங்கள் ஓரிடத்தில் இருந்து அதாவது உங்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் இடத்தில் வேறொரு இடத்துக்குச் செல்லும்போது அதிக கவனம் தேவை. முக்கியமான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். கட்டாயம் தேவையான துணிகள், அவை பனிப்பிரதேசம் என்றால் அதற்கு ஏற்றாற் போன்ற உடைகள், மாத்திரைகள், குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் வரும் என்றால் அதற்கான மாத்திரைகள். தேவையான உணவுகள் என அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்த எப்படி செல்கிறீர்கள், எத்தனை நாள், எத்தனை பேர், எங்கு போன்ற அனைத்தையும் திட்டமிட்டுவிடவேண்டும். ஒரு சிறிய திட்டமிருந்தால்தான் நல்லது. இந்தியாவில் நீங்கள் எங்கெல்லாம் செல்லலாம் என்று இங்கு ஒரு குறிப்பு கொடுக்கிறோம். நீங்கள் இதை உங்கள் பட்டியலில் வைத்துக்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு இடமாக சுற்றி வந்துவிடுங்கள்.

இந்தியாவில் நீங்கள் குடும்பமாக சுற்றுலா செல்ல எண்ணற்ற இடங்கள் உள்ளன. அது உங்களின் விடுமுறையை நினைவுகள் நிறைந்ததாக மாற்றும். மலைத்தொடர்கள் முதல் சாகசங்கள் நிறைந்த 10 இடங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு ஒவ்வொன்றாக சென்றுவிட்டு வாருங்கள்.

உதய்ப்பூர், ராஜஸ்தான்

ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படுவது உதய்பூர், இதில் குடும்பங்களை கவர்ந்து இழுக்கும் எண்ணற்ற சுவாரஸ்யங்கள் உள்ளன. இங்குள்ள ஏரிகளில் நீங்கள் படகு சவாரி செய்து மகிழலாம். இங்குள்ள பெரிய அரண்மனை மற்றும் பிச்சோலா ஏரியை நீங்கள் சுற்றிப் பார்த்து மகிழலாம்.

கேரளா

கேரளாவில் படகு இல்லம், கிராமங்கள் மற்றும் கடல் பேக்வாட்டர் இடங்கள் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவங்களைத்தரும். நீங்கள் குடும்பத்தினருடன் இங்கு சென்று மகிழலாம். ஆலப்புழா, கொச்சி, குமரக்கோம் என இங்கு நீங்கள் கொண்டாடி மகிழ எண்ணற்ற இடங்கள் உள்ளன.

ஆக்ரா, உத்ரபிரதேசம்

உத்ரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா, குடும்பமாகச் செல்ல ஏற்ற இடம். இங்குள்ள தாஜ்மஹாலை கண்டு மகிழலாம். இந்தியாவின் பெரும் வரலாற்றின் சின்னமாக ஆக்ரா உள்ளது. எனவே இந்தியர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களுள் ஆக்ராவும் ஒன்று.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய இடம் ஜெய்ப்பூர். குடும்பமாக நீங்கள் செல்ல திட்டமிட்டால் இங்கு செல்லாம். இங்கு பிரமாண்ட கோட்டைகளும், அரண்மனைகளும் உள்ளது. இங்குள்ள கலாச்சாரம் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ உகந்தது ஆகும்.

கோவா

இந்தியாவில் நீங்கள் எங்கு செல்லவில்லையென்றாலும், கோவா கட்டாயம் செல்லவேண்டிய சுற்றுலாதலம் ஆகும் கோவா அதன் பீச்களுக்காக அறியப்படுவது. இங்கு குடும்பமாக சென்று மகிழலாம். இங்குள்ள ரிசார்ட்களும் உங்களுக்கு கொண்டாட ஏற்ற இடமாக அமையும். கோவா சுற்றுலா உங்களுக்கு நல்ல அனுபவத்தைத்தரும்.

ரிஷிகேஷ், உத்ரகாண்ட்

ரிஷிகேஷ், சாகசங்களை விரும்பும் குடும்பத்தினர் செல்ல ஏற்ற இடம். இங்கு அவர்கள் தண்ணீர் சாகங்களை செய்து மகிழலாம். இங்குள்ள ஆறுகளில் அதற்கான எண்ணற்ற நீர் விளையாட்டுகள் நிரம்பியிருக்கும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார்

அந்தமான், குடும்பத்தினர் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும். இங்கு பறவைகள் பார்த்தல் மற்றும் தண்ணீர் விளையாட்டுகளை மக்கள் விளையாடி மகிழலாம்.

டெல்லி, செங்கோட்டை

டெல்லியில் வரலாற்று அழகும், நவீன முன்னேற்றமும் கலந்து உங்களை வியக்கவைக்க எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. இது நீங்கள் குடும்பத்தினருடன் செல்ல ஏற்ற இடமாகும். விடுமுறைகளை நீங்கள் இங்கு சென்று கொண்டாடலாம். இங்கு குதுப்மினார், செங்கோட்டை, இந்தியா கேட் மற்றும் ஹீமாயூனின் ஸ்தூபி ஆகியவை உள்ளன. இவற்றையெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.

ஊட்டி, தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள மலைவாசஸ்தலம். இங்கு எப்போதும் உங்களை மகிழ்விக்கும் குளிர் வானிலை நிலவும். அது உங்கள் மனதை மயக்கும். இது குடும்பத்தினர் விடுமுறையைக் கொண்டாட சிறந்த இடம் ஆகும். நீலகிரி மலை ரயில், பொட்டானிக்கல் கார்டன். ஊட்டி ஏரி என நீங்கள் அங்கு பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளது.

ஷிம்லா, இமாச்சல பிரதேசம்

ஷிம்லா, இங்கு இயற்கை காட்சிகள் நன்றாக இருக்கும். இங்கு நிலவும் குளிரும் இதமாக இருக்கும். குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையைக் கொண்டாட ஏற்ற இடமாக இமாச்சல பிரதேசம் இருக்கும். இங்கு பொம்மை ரயில் பயனம் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவாரஸ்யமான விஷயங்களும் இருக்கும்.

இந்தியாவில் இவைதான் நீங்கள் சுற்றி பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள். இவற்றை பற்றி இப்போது தெரிந்துகொண்டீர்கள் அல்லவா. உடனே தயாராகுங்கள். சுற்றலாவுக்கு. Happy Journey!

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி