Top 8 Relationship Tips : திருமண உறவில் நிலைக்கவேண்டுமா? பொறுமை மிகவும் அவசியம்! அதற்கு இந்த 8 வழிகள் உதவும்!
Aug 09, 2024, 04:40 PM IST
Top 8 Relationship Tips : திருமண உறவில் நிலைக்க வேண்டுமா? பொறுமை மிகவும் அவசியம், பொறுத்துக்கொள்வது இருவருக்கும் தேவை. அதற்கு உதவும் இந்த 8 வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
திருமணம் பந்தம் என்பது ஒருவர் வாழ்வில் மிகவும் முக்கியமான பந்தம். அதற்கு பொறுமை, அன்பு, பாசம், ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை, ஒருவரையொருவர் கவனிப்பது, எதிர்பார்ப்புகளை வகுத்துக்கொள்வது, திறந்த மனதுடன் நடந்துகொள்வது, ஒருவர் மீது ஒருவருக்கு அக்கறை, அனுதாபம் என அனைத்தும் தேவை. அந்த உறவில் நிலைத்திருக்க உங்களுக்கு இங்கு வழிகாட்டி வருகிறோம். அதற்காக ஹெச்.டி. தமிழ் தேர்ந்தெடுத்த தகவல்களை வழங்கி வருகிறது.
உங்கள் உறவில் நிலைத்திருக்க இந்த 8 வழிகளை கடைபிடியுங்கள்.
பொறுமை
உங்களுக்கு விரக்தியும், பொறுமையின்மையும் ஏற்படுகிறதா? அந்த தருணத்தில் நீங்கள் உங்களை இழப்பது இயல்பான ஒன்றுதான். எனவே பொறுமையை கடைபிடியுங்கள். அது உங்கள் பிணைப்பை அதிகரிக்கும். இது உங்கள் இருவரிடையே புரிதலை ஏற்படுத்தும். எனவே உங்கள் உறவில் பொறுமையை வளர்த்தெடுக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நன்றாக கவனிப்பதை பழகுங்கள்
உங்கள் பார்ட்னர் பேசும்போது அவரிடம் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அவர்கள் பேசும்போது கட்டாயம் கவனிக்கவேண்டும். இது உங்களுக்கு புரிதல் மற்றும் அவர்களின் கோணத்தை நன்றாக காட்டும். இது உங்களுடன் ஆழ்ந்த தொடர்பை வளர்த்தெடுக்கும்.
எதிர்பார்ப்புகள்
ஒவ்வொருவரும் நிறை மற்றும் குறைகளால் ஆனவர்கள்தான். இதனால் தம்பதிகளுக்கு ஒத்துபோகாமல் போது இயற்கைதான். எனவே உங்கள் பார்ட்னரிடம் இருந்து அவர்கள் மிகத்துல்லியமாக இருக்க வேண்டும் என்பதை எதிர்பாருங்கள். நீங்களும் அனைத்து விஷயங்களையும் மிகத்துல்லியமாக செய்துவிட முடியாது. எனவே எதிர்பார்ப்புகளில் கவனமாக இருங்கள்.
ஆழ்ந்த மூச்சு
உங்களுக்கு விரக்தி ஏற்பட்டாலோ அல்லது பொறுமையிழந்தாலோ கத்தவேண்டாம். ஒரு சிறிய ப்ரேக் எடுத்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சைவிடுங்கள். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். கோவத்தில் நீங்கள் கொந்தளிக்க தேவையில்லை. இது உங்களை அமைதிப்படுத்தி, சிந்திக்க உதவும்.
திறந்த மனதுடன் பேசுங்கள்
உங்களின் உணர்வுகள் மற்றும் அக்கறையை அமைதியாகவும், மரியாதையாகவும் வெளிக்காட்டுங்கள். தெளிவாக நீங்கள் ஒருவரிடம் பேசும்போது, அது அவர்களிடையே புரிதலின்மையைத் தடுக்கிறது. நம்பிக்கையை வளர்த்தெடுக்கிறது.
உங்கள் பார்ட்னரிடம் அனுதாபத்துடன் நடந்துகொள்ளுங்கள்
உங்கள் பார்ட்னரின் கோணத்தில் நீங்கள் அனைத்தையும் பார்க்க முயற்சி செய்யுங்கள். அனுதாபம் மற்றும் புரிதல்தான் உங்களை உறவில் நிலைத்திருக்க வைக்கும். அவர்களின் செயல்கள் மற்றும் அவர்களின் எதிர்வினைகளை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள அனுதாபம் உதவும்.
உண்மையான இலக்குகள்
உங்கள் உறவில், உங்களால் எட்ட முடிந்த இலக்குகளை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். அவற்றிற்கு நேரமும் விதிக்காதீர்கள். ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்தில் அதை செய்து முடிக்காவிட்டால், அது உங்களை வறுத்தும் எனவே உங்களின் அழுத்தத்தை குறைக்க பொறுமையாக முன்னேறுங்கள்.
சுயகவனம் தேவை
உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் உறவுக்கு மிகவும் முக்கியம். இது உங்களின் மனநலனை அதிகரிக்க உதவும். உறவில் நல்ல மனநலன் என்பது பொறுமைக்கு உதவும். உங்களை அமைதிப்படுத்தும், உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
நேர்மறையாக இருங்கள்
உங்கள் உறவின் நேர்மறையான பகுதியில் கவனம் செலுத்துங்கள். உங்களின் நல்ல நேரங்கள் உங்களை பொறுமையாக காத்திருக்க உதவும். சவாலான காலங்களில் பொறுமையை கடைபிடித்து உறவில் நிலைத்திருங்கள்.
எனவே இவற்றையெல்லாம் உங்கள் உறவில் பின்பற்றி உறவை மேம்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் பல நல்ல உறவை மேம்படுத்தும் குறிப்புகளுக்கு ஹெச்.டி தமிழுடன் இணைந்திருங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்