(6 / 8)சாப்பிட்ட பின் வாயை கொப்பளிக்க வேண்டும் - குழந்தைகளுடன் நீங்கள் வெளியே எங்கு சென்றாலும், உங்களுடன் தண்ணீரை எடுத்துச் செல்லவேண்டும். உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட்டாலும், உடனே அவர்களின் வாயை கழுவிவிடவேண்டும். உங்கள் குழந்தை உறங்கும்போது, அவர்கள் வாயில் பால் பாட்டிலோ அல்லது தண்ணீர் பாட்டிலோ இருக்கக்கூடாது. அப்படியிருந்தாலும் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படும். அது விரைவாக பரவும் தன்மையும் கொண்டது. உங்கள் குழந்தைகளை எப்போதும் எதை சாப்பிட்டாலோ அல்லது பருகினாலோ வாயை கொப்பளித்துவிடவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுங்கள். அந்த பழக்கத்தை அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கட்டும். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பற்களை பாதுகாக்க உதவும். மேலும் குழந்தையிலும் வாய்க் கொப்பளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, பற்களின் உள்ளே உணவு துகள்கள் தங்கி அவை பல் சொத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.