Thonnai Biriyani : கர்நாடக ஸ்பெஷல் தொன்னை பிரியாணி! காய்கறிகள் சேர்த்து செய்வது எப்படி?
Aug 15, 2023, 02:36 PM IST
Thonnai Biriyani : கர்நாடக ஸ்பெஷல் தொன்னை பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
மேரியனெட் செய்ய
கேரட் – 1 (நீள வாக்கில் வெட்டியது)
பீன்ஸ் – 8 (நீள வாக்கில் வெட்டியது)
உருளைக்கிழங்கு – 1 (தோல் சீவி சதுரமாக நறுக்கியது)
பீன்ஸ் – 1 கைப்பிடி
காளிஃபிளவர் – ஒரு கைப்பிடி
தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பாஸ்மதி அரசி – 1 கப் (அலசி 20 நிமிடங்கள் ஊறவைத்தது)
அரைக்க
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லித்தழை, புதினா – ஒரு கைப்பிடி
பிரியாணி செய்ய
வெங்காயம் – 1 (நறுக்கியது)
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
முழு கரம் மசாலா – பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், ஸ்டார் சோம்பு, கல்பாசி
கொத்தமல்லிப்பொடி – 1 ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் மேரியனேட் செய்ய கொடுத்துள்ள கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், காளிஃபிளவர், தயிர், மிளகாய் தூள், உப்பு என அனைத்தையும் மேரியனேட் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது குக்கரில், எண்ணெய் நெய் சேர்த்து முழு கரம் மசாலாப்பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனுடன், அரைத்த பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மேரியனேட் செய்து வைத்துள்ள காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
பின்னர் பாஸ்மதி அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட வேண்டும்.
குக்கரை மூடி வழக்கமாக நீங்கள் விடும் விசில்கள் விட்டு அல்லது மூடிவைத்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லித்தழை சிறிது தூவி, நெய் சேர்த்து, வறுத்த முந்திரி (தேவையென்றால் சேர்த்துக்கொள்ளலாம்) சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை கர்நாடகா ஸ்பெஷல் வெஜிடபிள் தொன்னை பிரியாணி என்று கூறுகிறார்கள். இதற்கு வெங்காயம், வெள்ளரி பச்சடி அல்லது ஏதேனும் ஒரு கிரேவி செய்துகொள்ளலாம்.
டாபிக்ஸ்