இப்படி கூட கண்டு பிடிக்கலாமா? உங்க கண் நிறம் மட்டும் போதும்.. நீங்க யார் என சொல்வதற்கு?
Nov 05, 2024, 09:21 PM IST
கண்களின் நிறத்தை பொருத்து ஒரு மனிதனின் குணம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
உடலின் ஒவ்வொரு பாகமும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. அதில் ஒன்று நம் கண்கள். நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து. நம் கண்களில் வித்தியாசமான உணர்வு தோன்றும். கண்ணால் பேசுபவர்கள் பலர் இருப்பதை நாம் அறிவோம்.
இந்தக் கண்களைக் கொண்டே நமக்கு எப்படிப்பட்ட ஆளுமை இருக்கிறது என்பதையும் சொல்லலாம். கண் நிறம் நபருக்கு நபர் மாறுபடும். பெரும்பாலானவர்களுக்கு கருப்பு கண்கள் உள்ளன, சிலருக்கு நீலம், வெளிர் பச்சை, சாம்பல் போன்றவை இருக்கும். மேலும் இந்த கண்களின் நிறத்தை பொருத்து ஒரு மனிதனின் குணம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
பிரவுன் கண்
பிரவுன் கண் கொண்டவர்கள் நேர்மையானவர்கள். மிகவும் நட்பான நடத்தையும் கூட. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். வாழ்க்கையில் பெயர், பணம், உறவை எளிதில் சம்பாதிக்கலாம். இவர்கள் வாழ்வில் எதை விரும்பினாலும் எளிதில் கிடைக்கும். மற்றவர்களுக்கு எளிதில் அடிபணிய மாட்டார்கள். வலுவான தகவல்தொடர்பு திறன்களுடன் ஆதிக்கம் செலுத்தாமல் உறுதியாக இருப்பார்கள். உண்மையான மதிப்பை உலகிற்கு நிரூபிக்க எப்போதும் ஆர்வமாக இருப்பீர்கள்.
கருப்பு கண்
கடினமாக உழைக்க வேண்டும் என்பதே கருப்பு கண் கொண்டவர்களின் தத்துவம். பொறுப்பாக இருப்பது மட்டுமல்ல எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் அதைச் செய்வதில் ஒரு படி முன்னேறி விடுகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தில் வாழும் ஆளுமை கொண்டவர்கள். பொதுவாக அமைதியாக இருந்தாலும் கோபமும், பிடிவாதமும் எப்போதாவது இவர்களை சூழ்நிலைகளில் தள்ளலாம். உறவுகளில் நுழைவது அல்லது புதிய நண்பர்களை உருவாக்குவது என்பதில் இவர்கள் அவசரப்படுவதில்லை.
வெளிர் பச்சை நிற கண்
இந்த நபர்கள் மற்றவர்களை விட கவர்ச்சியாகத் தெரிகிறார்கள். அழகில் மட்டுமல்ல, புத்திசாலித்தனத்திலும் இவர்களை வெல்ல யாராலும் முடியாது. அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் மற்றவர்களால் போற்றப்படுகிறார்கள். இளமை மற்றும் உயிர்ச்சக்தியால் நிறைந்தவர்கள்.
நீல கண்
இவர்களுக்கு வாழ்க்கையில் உயர் அந்தஸ்து, அதிக பணம் மற்றும் புகழ் கிடைக்கும். ஆனால் இவர்களுக்கு அதே பலவீனம். யோசிக்காமல் முடிவு எடுக்கிறார்கள். இதனால், தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி சிரமப்படுகின்றனர். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். அனைவருக்கும் உதவி என்றால் தயங்காமல் ஓடி சென்று உதவி செய்வார்கள்.
சாம்பல் நிற கண்
இந்த நபர்களின் ஆளுமை மிகவும் சக்தி வாய்ந்தது. அவர்கள் உணர்ச்சிவசப்படுவதால், அவர்கள் சிறிய விஷயங்களுக்கு வருத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் ஆளுமை கொண்டவர்கள். இவர்களிடம் தலைமைப் பண்பு அதிகம். சாம்பல் நிற கண் கொண்டவர்கள் ஒருவரை பார்க்கும் குணம் தனியாக தெரியும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்