வித்தியாசமான சுவையான சத்தான இந்த 2 ரசங்களை செய்து சாப்பிடுங்க...செமயா இருக்கும்!
Mar 03, 2023, 08:09 PM IST
வித்தியாசமான சுவையான சத்தான இந்த 2 ரசங்களை செய்முறைகளை இங்கு பார்க்கலாம்.
ரசங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வித்தியாசமான இரண்டு வித ரசங்களை இங்கு காண்போம். முதலில் ஆப்பிள் மற்றும் துவரம்பருப்பு ரசம். அடுத்தது திராட்சை மற்றும் தக்காளி ரசம்
ஆப்பிள் மற்றும் துவரம்பருப்பு ரசம் தேவையானவை:
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப்,
வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) - அரை கப்,
தக்காளி துண்டுகள் - கால் கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க:
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்,
மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.
ஆப்பிள் மற்றும் துவரம்பருப்பு ரசம் செய்முறை:
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்).
பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும்.
எண்ணெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.
திராட்சை மற்றும் தக்காளி ரசம்
திராட்சை மற்றும் தக்காளி ரசம் செய்யத் தேவையானவை:
நறுக்கிய தக்காளி - கால் கப்,
பச்சை திராட்சை - கால் கப்,
மிளகு - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
துவரம்பருப்பு- ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒன்றரை கப், கறிவேப்பிலை- சிறிதளவு,
கடுகு - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
நெய் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
திராட்சை மற்றும் தக்காளி ரசம் செய்முறை:
வெறும் கடாயில் மிளகு, சீரகம், மிளகாய், தனியா துவரம்பருப்பு, பெருங்காயத்தூளை வறுத்து பொடிக்கவும். தக்காளி, திராட்சை இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
இந்தச் சாறுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு, நெய், வறுத்த பொடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
இதில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்கவும்.
பிறகு துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீரை சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விடவும்.
ரசம் பொங்கி வரும்போது இறக்கி வைத்து நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
ரசத்தை இறக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறும், இரண்டு கீறிய பச்சை மிளகாய்களையும் சேர்த்தால் சுவை கூடும்.
திராட்சை தக்காளி ரசம் தயார்!
டாபிக்ஸ்