Suraikkai dosai: கொலஸ்டிரால், உடல் எடையைக் குறைக்க உதவும் சுரைக்காய் தோசை
Jan 13, 2023, 08:49 PM IST
கொலஸ்டிரால், உடல் எடையைக் குறைக்க உதவும் சுரைக்காய் தோசை செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
சுரைக்காய் ஒரு நீர்க்காய், இதில் நீர்ச்சத்துதான் அதிகமாக இருக்கும். கொலஸ்டிரால் பிரச்னை, நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சுரைக்காய் தோசை மிகவும் நல்லது. இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்காது. மேலும் கொழுப்பும் குறையும்.
சுரைக்காய் தோசை செய்யத் தேவையான பொருட்கள்-
30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
1 கப் இட்லி அரிசி
2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
2 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
2 மிளகாய் வற்றல்
1 சிறிய துண்டு இஞ்சி
1 கப் நறுக்கிய சுரைக்காய்
1/2 டீஸ்பூன் சீரகம்
1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு எண்ணெய்
செய்முறை-
ஸ்டெப் 1
ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு சேர்க்கவும்.
ஸ்டெப் 2
பின்பு கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஸ்டெப் 3
அரிசி பருப்பு வகைகளை கழுவி இதனுடன் மிளகாய் வற்றல், இஞ்சி துண்டு மற்றும் சுரைக்காய் சேர்க்கவும்.
ஸ்டெப் 4
இதனுடன் சீரகம், பெருஞ்சீரகம் மற்றும்
பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
ஸ்டெப் 5
பின்பு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் வைக்கவும்.
ஸ்டெப் 6
தோசைக்கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
ஸ்டெப் 7
தேவையான அளவு எண்ணெய் தெளித்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.