தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிசிஓஎஸ் பிரச்னைக்கு தீர்வு தரும் மூலிகை வகைகள்

பிசிஓஎஸ் பிரச்னைக்கு தீர்வு தரும் மூலிகை வகைகள்

Feb 22, 2022, 08:17 PM IST

google News
பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை கட்டி பாதிப்புக்கு தீர்வாக இலவங்கப்பட்டை முதல் துளசி இலை வரை என வீட்டில் இருந்தபடியே நிவாரணம் பெறலாம்.
பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை கட்டி பாதிப்புக்கு தீர்வாக இலவங்கப்பட்டை முதல் துளசி இலை வரை என வீட்டில் இருந்தபடியே நிவாரணம் பெறலாம்.

பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை கட்டி பாதிப்புக்கு தீர்வாக இலவங்கப்பட்டை முதல் துளசி இலை வரை என வீட்டில் இருந்தபடியே நிவாரணம் பெறலாம்.

ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற நிலை, முகப்பரு, வளர்சிதை மாற்றத்தில் தொந்தரவு, மலட்டுத்தன்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. பத்தில் ஒரு பெண் தனது இனப்பெருக்க வயதில் சினைப்பை கட்டி (பிசிஓஎஸ்) பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பிசிஓஎஸ் அறிகுறிகள் தென்பட்டால் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்வதன் மூலம் அந்த பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். வீட்டிலிருந்தபடியே சில மூலிகை வகைகளின் மூலம் இதற்கு சில தீர்வுகளை காணலாம்.

இலவங்கப்பட்டை

மிகவும் பிரபலமான மசாலா பொருளான இலவங்கப்பட்டை இந்திய வீடுகளின் அடுப்பாங்கரையில் தவறாமல் இடம்பெறும் பொருளாக உள்ளது. இது உடலிலுள்ள இன்சுலின் உணர்திறன் விளைவுகளை அறிய உதவுகிறது. பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை சீராக்கி, பிசிஓஎஸ் பாதிப்புள்ள பெண்களுக்கு நேர்மறையான விளைவுகளை உண்டாக்குகிறது.

பிசிஓஎஸ் பாதிப்புள்ள பெண்களுக்கு நேர்மறையான விளைவுிகளை தரும் இலவங்கப்பட்டை

அஸ்வகந்தா

உடலிலுள்ள கார்டிசால் அளவை சமநிலைப்படுத்தும் மூலிகையாக அஸ்வகந்தா உள்ளது. இது மனஅழுத்தம், பிசிஓஎஸ் அறிகுறி போன்றவற்றை போக்க உதவுகிறது.

2016ஆம் ஆண்டு பிசிஓஎஸ் பாதிப்புக்குள்ளான 52 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பிசிஓஎஸ் பாதிப்பின் காரணமாக நாள்பட்ட மனஅழுத்தம் மற்றும் கவலையில் இருக்கும்போது அஸ்வகந்தா உட்கொண்டவுடன் உடனடியாக நிவாரணம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனஅழுத்தத்தை போக்குவதோடு மட்டுமல்லாமல் பிசிஓஎஸ் பிரச்னைக்கும் நல்ல தீர்வு அளிக்கும் அஸ்வகந்தா

இதுமட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் அஸ்வகந்தா உதவுகிறது.

மக்கா வேர்கள்

பிசிஓஸ் பாதிப்பு உள்ள பெண்களின் மலட்டுதன்மையை போக்கி, கருவறுதல் தன்மையை அதிகரிக்க மக்கா செடியின் வேர்களை பொடியாக அறைத்து அதை நீரில் கரைத்து பருகலாம். இதன் மூலம் எதிர்பார்த்த பலனையும் பெறலாம்.

பெண்களின் கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும் மக்கா செடி வேர்

துளசி

துளசி இலை பிசிஓஎஸ் பாதிப்பு உள்ள பெண்களின் இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜென் அளவுகளை கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள ஆன்ட்ரோஜெனுக்கு எதிரான பண்புகள் பிசிஓஎஸ் அறிகுறி தென்படாமல் பார்த்துக்கொள்கிறது.

பிசிஓஎஸ் இருக்கும் பெண்களுக்கு ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பதன் காரணமாக, முகப்பரு மற்றும் அதிக அளவிலான ரோமங்கள் வளர்கிறது. இந்த ஹார்மோன்கள் சுரப்பை துளசி இலை நன்கு கட்டுப்படுத்துகிறது.

மஞ்சள்

சக்திவாய்ந்த பாலிபினாலான மஞ்சளில் கர்கமின் என்ற ஆரஞ்சு நிறத்திலான கலவை ஒன்று இடம்பிடித்துள்ளது. இதில் அழற்சிக்கு எதிரான பண்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் பாதிப்புக்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன.

மேற்கூறப்பட்டுள்ள கர்கமினில், பிசிஓஎஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது என 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதிமதுரம்

அதிமதுரத்தில் அழற்சிக்கு எதிரான பண்புகள் நிறைந்து இருப்பதால், நரம்பு வலி, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளுக்கு தீர்வாக உள்ளது. இதிலுள்ள கிளைசிரைசிக் அமிலம் கார்டிசோலாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகிறது.

அழற்சி மற்றும் வலிகளுக்கு எதிராக போராடும் அதிமதுரம்

இதனால் உடலில் ஏற்படும் அனைத்து விதமான அழற்சிகளுக்கும் எதிராக போராடுகிறது. இவை மாதவிடாயின் போது வலி ஏற்படுவது, நரம்பு தொடர்பான வலிகள், கருப்பை நீர்கட்டிகளை தணிக்க உதவுகிறது. அதேபோல் ஹார்மோன் சமநிலையின்மையையும் மேம்படுத்துகிறது.

தண்ணீர் விட்டான்

சைட்ரோஜென், இயற்கையான சைட்டோகெமிக்கல் நிறைந்துள்ள தண்ணீர் விட்டான், பிசிஓஎஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது.

ஹார்மோன்களின் சமநிலையின்மையை சீர் செய்யும் தண்ணீர்விட்டான் செடி

ஹார்மோன்களின் ஏற்படும் சமநிலையின்மையை சீர் செய்ய உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பில் சக்தி வாய்ந்த விளைவுகளை கொண்டதாக உள்ளது.

அடுத்த செய்தி