Sports Outfits : ஸ்போர்ட்ஸ்கான பிரத்யேக உடைகள் தரும் அசௌகர்யங்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Nov 08, 2023, 11:00 AM IST
உடற்பயிற்சிக்கென தனித்துவமாக வடிவமைக்கப்படும் ஆடைகளால் ஏற்படும் ஆரேக்கிய கேடுகள் குறித்து ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
உடற்பயிற்சிக்கென வடிவமைக்கப்படும் ஆடைகளில் வசதி, உடம்பிற்கு இதமான சூழல், வளைந்து கொடுக்கும் தன்மை போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக, பல உடற்பயிற்சிக்கென வடிவமைக்கப்படும் ஆடைகளில் நைலான், பாலியெஸ்டர், ஸ்பான்டெக்ஸ் போன்றவை அதிகம் இருப்பதோடு (இவை பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் நெகிழி (Plastics) வகை வேதிப்பொருட்கள்) ஆபத்தை விளைவிக்கும் பிஸ்பீனால்ஸ் மற்றும் தாலேட் வேதிப்பொருட்களும் உள்ளன.
UK பத்திரிக்கை செய்தியில், இத்தகைய தனித்துவ உடற்பயிற்சி ஆடைகளோடு உடற்பயிற்சி செய்யும்போது எழும் வியர்வையில் இவ்வேதிப்பொருட்கள் கசிந்து சருமத்தோடு ஏற்படும் தொடர்பின்போது, சருமம் மூலம் உடலினுள் நுழைந்து மிக மோசமான ஆரோக்கிய கேடுகளை உடலுக்கு ஏற்படுத்துவதாக பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வில், எளிதில் தீப்பற்றாத தன்மை கொண்ட பொருட்களிலும், ஆடைகளிலும், Brominated flame retardants (BFR) என்ற வேதிப்பொருள் இருப்பதால், அவை ஹார்மோன் பிரச்னைகள் (Endocrine Disrupters-ED), தைராய்டு பிரச்னைகள், நரம்பு மண்டல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பிஸ்பீனால்ஸ், தாலேட் வேதிப்பொருட்கள் காரணமாக, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், இரதயப் பிரச்னைகள், கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிப்பு (Attendiin Deficit Hyperactive Diseases-ADHD) ஆஸ்மா, சரும ஒவ்வாமை, இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு போன்ற நோய்களும் ஏற்படும் வாய்ப்புள்ளதால், வியர்வையை இயற்கையாக நன்கு உறிஞ்சும் பருத்தி நூலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உடற்பயிற்சி ஆடைகளை பயன்படுத்துவது சிறந்தது.
உடற்பயிற்சிக்கென தனித்துவ ஆடைகளில் வசதி கருதி தேவையற்ற வேதிப்பொருட்கள் இருப்பதை தவிர்த்து,பருத்தி ஆடைகளை பயன்படுத்தி விளையாட்டு வீரர்களின் உடல் நலனை பேணிகாக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்