Soya Keema: இந்த குளிருக்கு இரவில் சூடான தோசை சப்பாத்தியோடு சாப்பிட இதோ சத்தான சோயா கீமா!
Dec 19, 2023, 05:50 PM IST
சோயாவில் அதிக புரத சத்து உள்ளதால் உடலுக்கு சத்தானதும் கூட. சர்க்கரை, கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு செய்யும் போது பட்டர் அளவை குறைக்க வேண்டும். இல்லை என்றால் தவிர்த்து விடலாம்.
எப்போது தோசை, சப்பாத்திக்கு சட்னி குருமா வைத்து சலித்து போய் விட்டதா. வாங்க அட்டகாசமாக ஓட்டல் ஸ்டெயிலில் சோயா கீமா செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோயா
சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
உப்பு
கரம் மசாலா
மல்லித்தூள்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லி
எண்ணெய்
சோம்பு
பட்டை
இலவங்கம்
ஏலக்காய்
பிரியாணி இலை
பட்டர்
செய்முறை
100 கிராம் சோயாவை சூடான நீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த சோயாவை நன்றாக பிழித்து தண்ணீரை வடித்து விட வேண்டும் அதை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும்.
இது மிக்ஸி ஜாரில் 20 சின்ன வெங்காயம் 1 பெரியவெங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சி மற்றும் 6 பல் பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதில் ஒரு பழுத்த தக்காளியையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சோம்பு ஒரு துண்டு பட்டை, இரண்டு லவங்கம், இரண்டு ஏலக்காய் ஒரு பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும் அதில் ஒரு ஸ்பூன் சோம்பையும் சேர்க்க வேண்டும்.
சோம்பு பொரிந்த உடன் ஏற்கனவே அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி பேஸ்டை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காய பேஸ்ட் பச்சை வாடை போன உடன் அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதில் ஏற்கனவே அரைத்த சோயாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கலைந்து விட வேண்டும். சோயா மசாலா பச்சை வாடை போன பிறகு கடைசியாக அதில் 50 கிராம் வரை பட்டர் சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக பச்சை கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியான நறுக்கி சேர்த்து இறக்கினால் ருசியான சோயா கீமா ரெடி.
இந்த சோயா கீமா, இட்லி, தோவை, சப்பாத்தி , பூரி, நான் உடன் சேர்த்து சாப்பிட ருசி அட்டகாசமாக இருக்கும்.
சோயாவில் அதிக புரத சத்து உள்ளதால் உடலுக்கு சத்தானதும் கூட. சர்க்கரை, கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு செய்யும் போது பட்டர் அளவை குறைக்க வேண்டும். இல்லை என்றால் தவிர்த்து விடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்