தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soya Chunks Gravy : சுவையான சோயா சங்க்ஸ் கிரேவி – புரதச்சத்து நிறைந்தது; குழந்தைகளுக்கு விருப்பமானது!

Soya Chunks Gravy : சுவையான சோயா சங்க்ஸ் கிரேவி – புரதச்சத்து நிறைந்தது; குழந்தைகளுக்கு விருப்பமானது!

Priyadarshini R HT Tamil

Sep 26, 2023, 04:14 PM IST

google News
Soya Chunks Gravy : நினைச்சவுடனே பட்டுனு செஞ்சு சாப்பிடலாம் சோயா சங்க்ஸ் கிரேவி. அவ்வளவு ஈசியான ரெசிபி இங்கே.
Soya Chunks Gravy : நினைச்சவுடனே பட்டுனு செஞ்சு சாப்பிடலாம் சோயா சங்க்ஸ் கிரேவி. அவ்வளவு ஈசியான ரெசிபி இங்கே.

Soya Chunks Gravy : நினைச்சவுடனே பட்டுனு செஞ்சு சாப்பிடலாம் சோயா சங்க்ஸ் கிரேவி. அவ்வளவு ஈசியான ரெசிபி இங்கே.

சோயா சங்க்ஸ்களை வைத்து செய்யப்படும் இந்த கிரேவியை எளிதாக அரை மணி நேரத்திலேயே செய்து முடித்துவிடலாம். இதை சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. பன்னீரை விட குறைந்த கலோரிகள் உள்ளதால், இதை உடல் எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சோயா சங்க்ஸ் – 1 கப்

(சுடு தண்ணீரில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சோயா சங்க்ஸ் கெட்டியாக இருக்கும். அதை தண்ணீரில் ஊறவைக்கும்போதுதான் அது மிருதுவாகி, சாப்பிட உகந்ததாக மாறுகிறது)

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு – 2

பட்டை – 1

பிரியாணி இலை – 1

சோம்பு – அரை ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி-பூண்டு விழுது – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மல்லித்தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

காஷ்மிரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

தயிர் – கால் கப்

மல்லித்தழை -ஒரு கைப்பிடி

செய்முறை

சோயா தண்ணீரில் ஊறி பிழிந்து தயாராக உள்ளது.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரவேண்டும்.

பின்னர், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கிகொள்ள வேண்டும்.

பின்னர் தயிர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். தேவையான அளல உப்பு சேர்க்கவேண்டும்.

தண்ணீர் கொதித்து வரும் பதத்தில் ஏற்கனவே ஊறவைத்து பிழிந்து எடுத்து சோயா சங்க்ஸ்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் கொத்தமல்லித்தழைகள் தூவி இறக்க வேண்டும். சுவையான சோயா கிரேவி சாப்பிட தயாராக உள்ளது.

இதை நீங்கள் சப்பாத்தி, பூரி, புரோட்டா, நான் என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம். கொஞ்சம் தண்ணீராக எடுத்தால் டிஃபனுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். கொஞ்சம் கெட்டியாக எடுத்தால் சாதத்துக்கே தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

அனைத்து வெரைட்டி சாதம், நெய்சோறு, பிரியாணி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இந்த சோயா சங்க்ஸ் விருப்பமான ஒன்று. அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்துவிட்டீர்கள் என்றால், அவர்கள் குஷியாகிவிடுவார்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை