(4 / 4)சாமை - அரைக்கீரை சூப்- செய்முறை: ஒன்றரை டேபிள் ஸ்பூன் சாமை அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்றாக மணம் வரும்வரை வறுக்கவும். ஆறியதும் கழுவி சிறிய பிரஷர் பானில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 பூண்டுப் பற்களை இடித்துச் சேர்க்கவும். பின்னர் மிகப் பொடியாக நறுக்கிய அரைக்கீரையை சேர்த்து, 3 விசில் வரும்வரை வேக விடவும். அதனுடன் தேவையான உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும். வெவ்வாறு சிறுதானியஙகள், கீரைகள் மட்டுமல்ல, பல்வேறு காய்கறிகள், பட்டாணி, சுண்டல் வகைகளை சேர்த்தும் இதேபோன்று சூப் செய்யலாம். பால் சேர்த்தும் குடிக்கலாம். சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமாணத்துக்கு மிகவும் ஏற்றது.