Skin Care: இயற்கையான முறையில் முதுமை தோற்றத்தை தவிர்க்க உதவும் மூலிகைகள் இதோ!
Aug 18, 2023, 08:43 PM IST
சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதுமையான தோற்றம் ஏற்படுவதை இயற்கையான முறையில் தவிர்க்க சில மூலிகை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தை காணலாம். சருமத்தை பராமரிக்கும் மூலிகை வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சரும பராமரிப்பு என்பது சருமத்தின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாப்பதாகும். சருமம் பொலிவை இழப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்வியல் மாற்றங்கள், தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவற்றால் சரும பொலிவு குறைந்து இளம் வயதிலேயே வயதான தோற்றம் வர காரணமாகிறது
சருமத்தில் இருக்கும் ஈரப்பதமும், நெகிழ்வுதன்மையும் தான் அதை இளமையாக வைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறது. சருமத்தின் நெகிழ்வுதன்மைக்கு இயற்கையாக உடலில் உற்பத்தியாகும் கொலாஜென் காரணமாக உள்ளது.
வயது ஏறும்போது இந்த கொலாஜென் உற்பத்தி குறைகிறது. இதன் காரணமாக சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, நெகிழ்வு தன்மை குறைகிறது. அத்துடம் முகமும் பொலிவு இழந்து வாயதான தோற்றம் போல் காணப்படுகிறது.
இதை தவிர்ப்பதற்காக பல்வேறு காஸ்மெடிக் பொருள்களை பலரும் உபயோகிப்பதுண்டு. காஸ்மெடிக் பொருள்கள் சிலரும் வேறு மாதிரியான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். எனவே இயற்கையான முறையில் சரும பொலிவை பேனி பாதுகாக்கவும், இழந்த பொலிவை மீட்டெடுக்கும் வழிகளையும் பார்க்கலாம்.
சரும் பொலிவை தரும் சில மூலிகை வகைகள் இதோ
துளசி
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட துளிசி சரும பொலிவுக்கும் உதவுகிறது. துளிசியில் இடம்பிடித்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதிக்கு ஃப்ரீ ரேடிக்கள்களை கட்டுப்படுத்துகிறது. அத்தோடு கொலாஜென் உற்பத்தியையும் அதிகரிக்க செய்திறது.
10 முதல் 20 துளசி இலைகள் வெதுவெதுப்பான நீரில் நன்கு அரைத்து விழுதாக்க, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனை வாரத்துக்கு 2 முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
மஞ்சள்
சமையலில் இன்றியமையாததாக இருந்து வரும் மஞ்சள் கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரியும். இதில் இடம்பெற்றிருக்கும் ஆன்டி பாக்டீரியா தன்மை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை அழிக்கும். சருமம் இளமையாக வைத்து உதவுவதுடன், முகத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகளை நீக்கவும் உதவுகிறது. மஞ்சளை தயிருடன் கலந்து முகத்தில் பூசி வந்தால் மாற்றத்தை பார்க்கலாம்
இலவங்கப்பட்டை
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசால பொருளாக இருந்து வரும் இலவங்கப்பட்டை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மிருதுவாக்குகிறது. இதில் இருக்கும் ஆன்டி செப்டிக் பண்புகள் சரும துளைகளில் ஒளிந்திருக்கும் கிருமிகளை அகற்றுகிறது.
இலவங்கப்பட்டையில் இருக்கும் மூலக்கூறுகள் சருமத்தின் நிறம், பொலிவு ஆகியவற்றை பேனி பாதுகாக்கிறது. இலவங்கப்பட்டையை தூள் ஆக்கி அதில் சிறிது அளவு தேன் கலந்து முகத்திய பூசி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவதை கடைப்பிடிக்க வேண்டும்
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் இடம்பெற்று இருக்கும் சத்துக்கள் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள், முகப்பருக்களை நீக்குகிறது.
அஸ்வகந்தா
ஆன்டி பாக்டீரியா, பூஞ்சைக்கு எதிரான பண்புகள் கொண்டவையாக அஸ்வகந்தா உள்ளது. சருமத்தில் கிருமி, தொற்றுக்கள் உருவாகாமல் தடுத்து அதன் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது.
அஸ்வகந்தா பொடியுடன், இஞ்சி பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பூசி வந்த சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்