தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Care: உங்கள் சருமத்தில் மேஜிக் நிகழ்த்தும் குங்குமப்பூ! இப்படி மட்டும் செஞ்சு பாருங்க

Skin Care: உங்கள் சருமத்தில் மேஜிக் நிகழ்த்தும் குங்குமப்பூ! இப்படி மட்டும் செஞ்சு பாருங்க

Jan 20, 2024, 07:02 PM IST

google News
உலகின் அதிக விலை கொண்ட மசாலா பொருளாக குங்குமப்பூ இருந்து வருகிறது. உங்களது சருமத்தில் மேஜிக்கை தரக்கூடியதாக இருக்கும் குங்குமப்பூவால் கிடைக்கும் சரும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்.

எந்த வகை சரும பராமரிப்பு கிரீம்களுக்கும், ஃபேஸ் பேக்குகளுக்கும் குங்குமப்பூ நிரந்தர மூலப்பொருளாகவே இருந்து வருகிறது. குங்குமப்பூவின் குறைவான உற்பத்தி காரணமாக இதில் கலப்படங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருந்து வருகிறது.

உணவில் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படும் பொருளாக இருந்து வரும் குங்குமப்பூ, இருமல், சளி, வயிறு தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்க தன்மை கொண்டுள்ளது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் குங்குமப்பூ, உங்கள் சரும பராமரிப்புக்கு அன்றாடம் பயன்படுத்தும் பொருளாக இருந்து வருகிறது.

அன்றாடம் சருமத்தை பேனி பாதுகாக்க குங்குமப்பூ எப்படி உதவுகிறது என்பதை பார்க்கலாம்

பச்சை பாலுடன் குங்குமப்பூ

சருமத்துக்கான இயற்கையான சுத்தப்படுத்தியாக பச்சை பால், குங்கும்பபூ இருந்து வருகிறது. ஒரு மெல்லிய பஞ்சு எடுத்து குங்குமப்பூ கலந்த பாலை தொட்டு முகத்தில் தேய்த்து சுத்தப்படுத்தலாம். இதன் மூலம் இன்ஸ்டன்டாக பிரகாசத்தையும், பொலிவையும் பெறலாம்.

குங்குமப்பூ மற்றும் சந்தன கட்டை

குங்குமப்பூவுடன் ரோஸ் வாட்டர், சந்தன கட்டை தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் தேய்த்தால் இயற்கையான பொலிவை பெறலாம். இதுவொரு பேஸ் மாஸ்காகவும் செயல்படுகிறது. 4 முதல் 5 ஸ்பூன் சந்தனகட்டை பவுடர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் பலன் கண்முன்னே தெரியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை