தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Singapore Fried Rice : சிங்கப்பூர்ஃப்ரைட் ரைஸ்! இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

Singapore Fried Rice : சிங்கப்பூர்ஃப்ரைட் ரைஸ்! இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil

Nov 29, 2023, 10:00 AM IST

google News
Singapore Fried Rice : சிங்கப்பூர்ஃப்ரைட் ரைஸ், இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
Singapore Fried Rice : சிங்கப்பூர்ஃப்ரைட் ரைஸ், இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

Singapore Fried Rice : சிங்கப்பூர்ஃப்ரைட் ரைஸ், இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

தனியா தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகு தூள் – ஒரு ஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கியது

இஞ்சி – ஒரு ஸ்பூன் நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 நறுக்கியது

கேரட் – 1 நறுக்கியது

பச்சை குடைமிளகாய் – அரை கப் நறுக்கியது

மஞ்சள் குடைமிளகாய் – அரை கப் நறுக்கியது

சிவப்பு குடைமிளகாய் – அரை கப் நறுக்கியது

முட்டைக்கோஸ் – அரை கப் நறுக்கியது

சோயா சாஸ் – 2 ஸ்பூன்

சில்லி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – ஒரு ஸ்பூன்

வெங்காயத்தாள் வெங்காயம் – 1

வெங்காயத்தாள் கீரை – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை நறுக்கியது – ஒரு கைப்பிடி

செய்முறை -

கறி மசாலா தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவேண்டும். இதை ஒதுக்கி வைத்துவிடவேண்டும்.

அகன்ற கடாயில் நல்லெண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து 30 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய கேரட், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் துருவிய முட்டைக்கோஸ் சேர்த்து, அதிக தீயில் வறுக்கவேண்டும்.

வெங்காயத்தாள் கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்து கறி மசாலா தூள் சேர்த்து, சுவைக்கேற்ப சரி செய்து கொள்ள நன்றாக பிரட்ட வேண்டும்.

அடுத்து சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ் மற்றும் உப்பு சேர்க்கவேண்டும். நன்றாக கலக்கவேண்டும்.

பின்னர் குளிரூட்டப்பட்ட சமைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கலந்துவிட வேண்டும்.

மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவேண்டும்.

கடைசியில் நறுக்கிய வெங்காயத்தாள் கீரை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து விட்டார் சிங்கப்பூர் ஃப்ரைட் ரைஸ் சூடாக பரிமாற தயாராக உள்ளது.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்

இந்திய, சீன மற்றும் மலாய் உணவுகளில் கோலோச்சி வரும் ஃப்ரைட் ரைஸ் வகைகளுள் சிங்கப்பூர் ஃப்ரைட் ரைசும் ஒன்று. இது எப்போது பல்வேறு வகையான கறி மற்றும் கடல் உணவுகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் மட்டுமே சேர்த்து செய்வது.

இன்னும் இதனுடன், காளான், பன்னீர், ப்ரோகோலி உள்ளிட்டவையும் சேர்த்து செய்யலாம். இதிலே அதிக சுவையூட்டிகள் சேர்த்திருப்பதால், இதற்கென்று தனியாக சைட்டிஷ்கள் எதுவும் தேவையில்லை. உங்களுக்கு சைட்டிஷ் வேண்டுமென்றால் இந்திய மற்றும் சீன ஸ்ட்டார்களை சேர்த்துக்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை