தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Health Drink : காலையில் டீ, காபிக்கு பதிலாக இந்த பானம்! சோர்வு, மலச்சிக்கல், உடல் வலியை போக்கும்!

Morning Health Drink : காலையில் டீ, காபிக்கு பதிலாக இந்த பானம்! சோர்வு, மலச்சிக்கல், உடல் வலியை போக்கும்!

Priyadarshini R HT Tamil
Apr 13, 2024 12:20 PM IST

Morning Health drink : காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அதற்கு பதில், இந்த ஒரு பானம் மட்டுமே பருகினால் போதும். உங்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி, கை-கால் வலி, மூட்டு வலி, மலச்சிக்கல் போன்ற அனைத்தும் நீங்கும்.

Morning Health Drink : காலையில் டீ, காபிக்கு பதிலாக இந்த பானம்! சோர்வு, மலச்சிக்கல், உடல் வலியை போக்கும்!
Morning Health Drink : காலையில் டீ, காபிக்கு பதிலாக இந்த பானம்! சோர்வு, மலச்சிக்கல், உடல் வலியை போக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

மார்க்கெட்டில் கிடைக்கும் எனர்ஜி டிரிங்க் பவுடர்களை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தாமல் வீட்டிலே எளிதாகவும், சுவையாகவும், இந்த எனர்ஜி டிரிங்குகளை தயாரிக்கலாம்.

ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்றவாறு கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். கீழே ஒரு நபருக்கு ஒரு மாதம் வரக்கூடிய அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – ஒரு கப்

(வேர்க்கடலையில் அதிகளவு புரதச்சத்துக்கள் உள்ளது. முட்டை மற்றும் புரத உணவுகளின் அளவுக்கு புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் சளி, ஆஸ்துமா போன்ற தொல்லைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது வேர்க்கடலை)

கம்பு – ஒரு கப்

(கம்பும் புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள், பி காம்ப்ளக்ஸ், குறைவான கொழுப்பு ஆகியவை உள்ளது. இது நமது உடலில் உள்ள ரத்தத்தை நல்ல சுத்தம் செய்யும். ரத்த உற்பத்திக்கு உதவும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடல் சோர்வு, உடல் அசதி, கை – கால் வலி, மூட்டு வலி ஆகியவை உள்ளவர்கள் கம்பை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்)

கோதுமை – ஒரு கப்

(கோதுமையில் குறைவான அளவுதான் கொழுப்புச்சத்து உள்ளது. ஆனால், நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளது. மலச்சிக்கல் பிரச்னைகளை சரிசெய்யும்)

பொட்டுக்கடலை – ஒரு கப்

(பெண்கள் அதிகம் பொட்டுக்கடலையை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பூப்பெய்திய பெண்களுக்கு இடுப்புக்கு வலுவை கொடுக்கிறது)

ஜவ்வரிசி – ஒரு கப்

(ஜவ்வரிசியில் அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது. எலும்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும். உடல் சோர்வை நீக்கும்.

ஏலக்காய் – 5

(நறுமணம் கொடுப்பதோடு மூளையையும் சுறுசுறுப்பாக்கும். மனதை அமைதிப்படுத்தும்)

சுக்கு – சிறிய துண்டு

(சுவையைக் கொடுக்கும் செரிமானத்துக்கு உதவும்) ‘

செய்முறை

வேர்க்கடலையை வறுத்து தனியாக ஆறவைக்க வேண்டும்.

கம்பையும் தனியாக வறுத்து தனியாக ஆறவைக்க வேண்டும்.

கோதுமையையும் தனியான வறுத்து தனியாக ஆறவைக்க வேண்டும்.

பொட்டுக்கடலையும் வறுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜவ்வரிசியையும் சேர்த்து தனியாக வறுக்க வேண்டும். இதனுடன் 5 ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும்.

சுக்கின் தோலை நீக்கிவிட்டு, இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனித்தனியாக அரைத்து வைத்துள்ள அனைத்தையும், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து தனித்தனியாகவே அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நல்ல மிருதுவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சல்லடையி சலித்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றாக சலித்து, ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும். வேர்க்கடலையை அரைக்கும்போது கவனம் தேவை. அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும், எனவே பல்ஸ் மோடிலே மெதுவாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு காய் காற்றப்புகாத டப்பாவில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் வைத்து பயன்படுத்தலாம். 

காலையில் ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில், ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து கலந்து பருகலாம். இதனுடன் சுவைக்காக நாட்டுச்சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இதை கொதிக்க வைக்க வேண்டாம். ஏற்கனவே வறுத்துவிட்டதால், இதை அப்படியே பயன்படுத்தலாம்.

இதுபோன்ற சத்து மாவுக்களை தயாரித்து பருகும்போது, நாம் சாப்பிடும் உணவின் சத்துக்களையும் நமது உடல் கிரகிக்கும். எனவே இதுபோல் செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்