தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Palli Vilum Palan : பெண்களுக்கு இந்த இடத்தில் பல்லி விழுந்தால் ஆபத்து.. ஆனால் இந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்!

Palli Vilum Palan : பெண்களுக்கு இந்த இடத்தில் பல்லி விழுந்தால் ஆபத்து.. ஆனால் இந்த இடத்தில் விழுந்தால் அதிர்ஷ்டம்!

Divya Sekar HT Tamil
May 03, 2024 01:04 PM IST

Palli Vilum Palan For Women : பெண்ணின் கைகள் மீது பல்லி விழுந்தால் உங்களுக்கு பணத்தடைகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்ற பொருள். பெண்களின் இடது கையில் பல்லி விழுந்தால் மன உளைச்சல் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும்.

பல்லி விழும் பலன்
பல்லி விழும் பலன்

பெண்களின் உச்சந்தலையில் பல்லி விழுந்தால் அது மரண பயத்தை காட்டப் போகிறது என்று அர்த்தமாம். பெண்களின் தலையில் ஏதேனும் ஒரு பகுதியில் பல்லி விழுந்தால் அவர்களுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும், உடல்நிலை குறித்து ஏதாவது ஆபத்து வரக்கூடும் என்பதை இந்த பல்லி விழும் பலன் சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

இடது கண்ணின் மேல் பள்ளி விழுந்தால் நீங்கள் விரும்பக்கூடிய நபர் உங்களை விரும்புவதை குறிக்கிறது. பெண்களின் வலது கண்ணில் விழுந்தால் பெண்களின் வலது கண்ணில் பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு விஷயத்தில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களின் வலது கன்னத்தில் பல்லி விழுந்தால் அவருக்கு அல்லது அவருக்கு நெருங்கியவருக்கோ அழகான ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

பெண்களின் வலது காது மீது பல்லி விழுந்தால்உங்களின் இடைநிலை மிகவும் சிறப்பாக மேம்பட போகிறது என்ற பொருள். பெண்களின் மேல் உதடு மீது பல்லி விழுந்தால் அது உங்களுக்கு சில அவமானங்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். பெண்களின் மேல் உதடு மீது பல்லி விழுந்தால் பதட்ட நிலை வரப்பொகிறது என்று அர்த்தம். கீழ் உதட்டில் பல்லி விழுந்தால் உங்களுக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களின் முதுகு மீது பல்லி விழுந்தால் அவருக்கு மரண செய்தி வர வாய்ப்புள்ளது. பெண்களின் நகங்கள் மீது பல்லி விழுந்தால் வலது கை நகம் மீது பல்லி விழுந்தால் நஷ்டம், இடது கை நகங்களில் விழுந்தால் செலவும் அதிகரிக்கும். பெண்ணின் கைகள் மீது பல்லி விழுந்தால் உங்களுக்கு பணத்தடைகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்ற பொருள். பெண்களின் இடது கையில் பல்லி விழுந்தால் மன உளைச்சல் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும். பெண்ணின் விரல்கள் மீது பல்லி விழுந்தால் புதிய நகை ஆடைகளை வாங்க வாய்ப்புள்ளது. பெண்களின் வலது தோள்பட்டை மீது பல்லி விழுந்தால் உங்கள் காதல் துணையுடன் பிரச்சினை ஏற்படலாம்.

பெண்களின் தொடை மீது பல்லி விழுந்தால் அவருக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை விரைவில் சந்திக்கப் போக போகிறீர்கள் என்று பொருள். பெண்ணின் முழங்கால் மீது பல்லி விழுந்தால் அவருக்கு அதிக அன்பு கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். பெண்களின் மூட்டு பகுதியில் பல்லி விழுந்தால் அவருக்கு கூடிய விரைவில் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும். பெண்ணின் வலது காலில் பல்லி விழுந்தால் அவரின் முயற்சிகளில் தோல்வியை சந்திக்க நேரிடும். கால் விரல்களில் பல்லி விழுந்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது பெண்களின் கெண்டைக்கால் பகுதியில் பல்லி விழுந்தால் அவர்களின் வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கப் போகிறது என்ற பொருள்.

நன்றி : KK TimeWiseVision

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்